பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

286


தீரமிக்க போராட்டங்களுக்கோ பஞ்சமில்லை. எனினும் இந்தியாவில் வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்கதான கோர்ட் அவமதிப்பு வழக்கு - கண்ட்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்- 1957-ல் நடைபெற்றது, பெரியாரின் வீர வரலாற்றுக் காவியத்தில் ஒரு பொன்னேடாகும். என்ன அந்த நீதிமன்ற அவமதிப்பு?

திருச்சி மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ஆர்.எஸ். மலையப்பன் தஞ்சை மாவட்டத்துக் கள்ளர் வகுப்பில் பிறந்தவர். 30 ஆண்டுகட்கு மேலாக, சீரான நிர்வாகத்திறன் படைத்தவர். குளித்தலை வட்டத்தில் நிலக்குத்தகைத் தகராறில் அவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகப், பாதிக்கப்பட்ட நிலப்பிரபுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த இரு பார்ப்பன நீதிபதிகள், கலெக்டர் தமிழர் என்பதால், எவ்வளவு தூரம் தாக்க முடியுமோ தாக்கி, அரசு உடனே இவரை வீட்டுக்கனுப்ப வேண்டுமென்றும் பரிந்துரைத்தனர். இதனை உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டது, “இந்து” ஏடு. திருச்சி, வாழ் பொதுமக்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றவராதலின், மலையப்பன் மீது தீர்ப்பைக் கண்டித்து, ஒரு லட்சம் பொது மக்கள் திரண்டெழுந்த கூட்டத்தில், பழனியாண்டி (பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில், தீயிட்டுக் கொளுத்தப்பட்டது “இந்த”ப் பத்திரிகை. இந்த நிகழ்ச்சியும், 4.11.56 அன்று பெரியார் பேச்சும், “விடுதலை” ஆசிரியர் ஈ.வெ.ரா. மணியம்மையார் மீதும், அரசு வழக்குத் தொடர்ந்தது. பெரியார் 4.11.56 திருச்சிப் பொதுக்கூட்டத்தில் மிகத் துணிவுடன் பேசியிருந்தது உண்மையே. இரு பார்ப்பன நீதிபதிகள், ஒரு தமிழராகிய உயர் அதிகாரிக்கு எதிராகத் தீர்ப்பெழுதினார்கள். அட்வகேட் ஜெனரலாகிய ஒரு பார்ப்பனர், கலெக்டருக்காக (அரசுக்காக) வாதாடத் தவறினார். இதை ஆதரித்துப் பார்ப்பன ஏடான “இந்து” கும்மாளம் போடுகிறது. இது ஆரியர் திராவிடர் பிரச்சினையே தவிர வேறில்லை- என்று பெரியார் ஆவேசத்துடன் பேசியிருந்தார்.

வழக்கு விசாரணை 9.4.1957 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார், மற்றொரு நீதிபதி ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர் ஐ.சி.எஸ். ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. “குற்றவாளி என நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் பெரியாரைக் கேட்டார்கள். “இது சட்ட நீதி மன்றம்; நியாய நீதிமன்றமல்ல! (Court of Law, not Court or Justice) எனவே சட்டத்தின்படி நான் குற்றவாளியாகலாம். ஆனால் நியாயத்தின்படி அல்ல. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. தகுந்த அவகாசம் கொடுத்தால் எனது கருத்துக்களை ஒரு ஸ்டேட்மெண்ட் மூலமாகத் தெரிவிக்கிறேன்” என்று பெரியார் கோரவும் 15 கெடு தரப்பட்டது. 1957 ஏப்ரல் 23-ஆம் நாள் பெரியார் சிறை செல்லத்