உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

நோயினால் துன்புற்று நிறையப்பேர் மடிகின்றனர். இவ்வினப் பெண்களில் மலடிகள் அதிகம். பெண் குழந்தை பிறந்ததும் கொன்றுவிடும் பழக்கம் (Female Infanticide) இவர்களிடம் உண்டு . ஒருபெண் பல ஆண்களைத் திருமணம் செய்து, கொள்ளும் பழக்க (Polyandry)மும், பல காதலர்களை ஏற்றுக்கொள்ளும் பழக்கமும் இவர்களிடம் உண்டு . இவ்வளவு தடைகளை வைத்துக்கொண்டு, அவர்களுடைய இனம் எவ்வாறு பெருக முடியும்? நீலகிரி மலையில் மொத்தம் 1000 பேர்களே வாழ்கின்றனர். இவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தாலும் பழங்குடி ஆராய்ச்சியாளரின் கவனத்தை இவர்கள் ஈர்க்கும் அளவுக்கு, இந்திய நாட்டில் உள்ள எந்தப் பழங்குடியினரும் ஈர்ப்பதில்லை. நீலகிரி மலைமீது இவர்கள் கொண்டிருந்த தனியுரிமை பிறரால் கொஞ்சங் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டுவிட்டது. பொருளாதாரத்திலும், உள்ளமகிழ்ச்சியிலும் முன்னைவிடச் சற்றுக் குறைந்தவர் களாகவே காணப்படுகின்றனர். இந்திய ஊழியர்கழக (Servents of India Society)மும், சென்னை அரசாங்கமும் இவர்கள் முன்னேற்றத்திற்குத் துணைபுரிகின்றன. இவர்களுடைய குழந்தைகளுக்குக் கல்வி வசதி அளிக்கப்படுகிறது. மருத்துவ உதவியும், பொருளுதவியும் செய்யப்படுகின்றன. இப்பொழுது சோம்பலை நீக்கி ஒருசிலர் தோட்டக் கூலிகளாகப் பணி யாற்றுகின்றனர்.

தோற்றம் :

இவர்களுடைய தோற்றத்தையும், உடலமைப்புகளையும் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலதிறப்பட்ட செய்திகளைக் கூறுகின்றனர். இவர்களுடைய மூக்கு ரோமானிய இனத்தாருடையதைப் போன்றது; முகச் சாயல் கிரேக்க இனத்தைச் சார்ந்தது. எனவே ஆராய்ச்சியாளர்கள் இவ் வினத்தாரை ரோமானியர்