உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219

காரன் என்று அழைக்கப்படுகிறான். அவனுக்குத் துணையாகச் சேர்வைக்காரன், தோட்டி என்ற இருவர் உள்ளனர். தோட்டி நாட்டாண்மைக்காரனின் பணியாள். தமிழ் நாட்டின் மற்ற இடங்களில் வாழும் நாட்டாண்மைக்காரரைப் போலவே, இக்குலத்தாரின் நாட்டாண்மைக்காரனும் செல்வாக்கு மிக்கவனாக இருக்கிறான். புலையர்கள் மூன்று பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு பிரிவிற்கும் ‘கூட்டம்' என்று பெயர். கோலன்குப்பன் கூட்டம், பீச்சிக் கூட்டம், மண்டியான் கூட்டம் என்பவையே அவை. மேற்கூறிய மூன்று பேர்களும் அவர்கள் குலத்தின் முன்னோர்கள்.

ஒரு பெண் பருவமடைந்த பிறகே, திருமணம் செய்கின்றனர். திருமணம் பெற்றோர்களாலேயே ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணச் சடங்கு மிகவும் எளிய முறையிலேயே நடைபெறுகிறது. மணப்பெண்ணுக்கு ரூ. 25 பரிசப்பணமாக அளிக்கப்படுகின்றன. வெள்ளை மணிகளைக் கோத்துப் பெண்ணின் கழுத்தில், தாலியாக அணிவிக்கின்றனர். பரிசப்பணத்திற்கு ஈடான தொகையை ஒறுப்புக் கட்டண (fine) மாகச் செலுத்திவிட்டு ஆண், பெண் ஆகிய இருவரில் யார் வேண்டுமானலும் மணவிலக்குப் பெறலாம். மணவிலக்குப் பெற்றவர்களும், கைம்பெண்களும் தாம் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். புலையர்கள் மாயாண்டி, கரு மலையான், பூவாடை (பெண் தெய்வம்) என்ற தெய்வங்களை வணங்குகின்றனர். ஒவ்வொரு சிற்றூருக்கும் அருகில் அமைந்திருக்கும் திடலின்மேல் மாயாண்டியின் கோவில் இருக்கும். இக்கடவுளர்களுக்குப் புலையர்கள் சித்திரைத் திங்களில் விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் பன்னிரண்டு ஆடவர்கள் சேர்ந்து ஆடும் ஆட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இவ்வாட்டத்தில் பங்கு கொள்ளும் பன்னிரண்டு ஆடவரும் தங்