பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழச்சியின் கத்தி சேவலும் கூவா திருக்குதடா! செக்குந்தான் காவென்றும் கர்ரென்றும் கத்தா திருக்குதடா! மாவின் வடுபோன்ற கண்ணாள்காண்! மாங்குயிற்கும் கூவும் இனிமைதனைச் சொல்லிக் கொடுப்பவள்காண்! யாவரும் தம் அடிமை என்னும் இரண்டுதடும் கோவைப் பழமிரண்டின் கொத்து! நகை, முல்லை! அன்னம் பழித்தும், அகத்தில் குடி புகுந்தும், பின்னும்எனை வாட்டுகின்ற பெண்நடைபோற் காணேன்! கொடிபோல் இடைஅசைந்து கொஞ்சுகையில், யானைப் பிடிபோல் டிகள் பெயர்க்கையிலே அம்மங்கை கூட்ட வளையல் குலுங்கக்கை வீசிடுவாள் பாட்டொன்று வந்து பழிவாங்கிப் போடுமடா! அன்னவள்தான் என்னுடைய வாழ்வே! அழகுடையாள் என்னைப் புறக்கணித்தல் என்பதென் றன்சாவு! நிலவுமுகம் அப்பட்டம்! சாயல் நினைத்தால் கலப மயிலேதான்! கச்சிதமாய்க் கொண்டையிட்டுப் பூச்சூடி மண்ணிற் புறப்பட்ட பெண்ணழகை மூச்சுடையேன் கண்டுவிட்டேன் செத்தால் முகமறப்பேன்' என்று சுதரிசன்சிங்க் சொன்னான். இரவில்நொடி ஒன்றொன்றாய்ப் போபோஎன் றோட்டி, ஒருசேவல் நெட்டைக் கழுத்தை வளைக்க, நெடும்பரியைத் தட்டினான்; வீட்டெதிரே சாணமிடும் சுப்பம்மா அண்டையிலே நின்றான்! வரவேற்றாள் அன்னவனைக் கண்ட இனியகற் கண்டு!

22

22