பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சி.என். அண்ணாதுரை ஒரு ஒரு அண்ணாமலை மகாநாட்டுத் தீர்மானம் வகுப்பினரால் நிறைவேற்றப்பட்டதன்று; கொள்கையினர் நிறைவேற்றியதன்று; பல வகுப்பினரும் பல கொள்கையினருமே கூடிச் செய்த முடிவுதான் அது. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் அனைவரும் அம்மகாநாட்டிற் கலந்து கொண்டனர். அம் மகாநாட்டின் முடிவைப் பற்றிக் குறைகூற வீண் வகுப்பு வேற்றுமையையும், மொழி வேற்றுமையையும் கிளப்பி விடுவதற்குக் காரணம் நமக்கு விளங்கவில்லை.இந்து' பத்திரிகைகூட இந்த வீண் கிளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தடை இம்மாதிரியே தமிழ்க்கலை வளர்ச்சிக்காகச் செய்யப்படும் எல்லா முயற்சிக்கும் ஒரு கூட்டம் செய்து கொண்டிருந்தால், இறுதியில் தமிழர் நிலை எப்படி முடியும்? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டியதே தமிழன்பர்கள் கடமை: தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கடமை. தாய் மொழியிலேயே எல்லாம் தமிழ் நாட்டைப்போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் வளர்ச்சி செய்து வருகின்றனர்; இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப்போலத் உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காண முடியாது. தாய்மொழிக் கலை இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம்முயற்சியில் இசைக் கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்தது. இன்றும்