பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சி.என்.அண்ணாதுரை பிடிக்கவில்லை. அறிவு படைத்த யாருக்கும் பிடிக்காது. தமிழ் இசை என்று ஆரம்பிக்கும் தமிழன் வேறு எங்குமே தமிழ் ஆட்சிதான் தேவை என்றல்லவா கூறத் தொடங்குவான். அது நமக்கன்றோ ஆபத்தாக முடியும். ஆகவே, முளையிலேயே கிள்ளுவோம். தமிழ் உணர்ச்சியைத் தலைத்தூக்க ஒட்டாது அடிப்போம் என்பதே ஆரியரின் நோக்கம். தமிழகத்தின் தமிழ் உணர்ச்சி,தமிழர் என்ற உணர்ச்சியையும், தமிழ்நாடு தனிநாடு என்ற உணர்ச்சியையும் வளர்த்து விடும் என்ற அச்சம் ஆரியரைப் பிடித்துக் கொண்டது. அதனை வெளிப்படையாகப் பேச வெட்கி; "இசையில் மொழிப்போர் என்ன? தியாகய்யர் என்னாவது? சியாமா சாஸ்திரிகள், தீட்சிதர் கிருதிகள் என்னாவது?" என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். அண்ணாமலை நகரில் கூடினோர், மேற்படி கிருதிகள் அழிந்தொழிய வேண்டும் என்று கூறினாரில்லை. அவைகள் உள்ளன. ஆனால் தமிழ் நாட்டிலே தமிழ் இசை இருக்கட்டும்; இதற்கு ஆதரவு தேடுவோம் என்று கூறினர். இதற்கும் எதிர்ப்பு இருக்கிறதென்றால். பிறகு, தமிழகத்துக்குத் தேவையில்லாதவைகளைத் துரத்தும் வேலை, மும்முரமாக நடக்கும் என்பது திண்ணம். தமிழில் பாட்டு இல்லையா? சுதேசமித்திரன் இதுபற்றி எழுதுகையில், "நமது சங்கீத வித்வான்கள் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுக்களை ஏன் அதிகமாகப் பாடுவதில்லை? கச்சேரி களை கட்டத் தகுந்த போதிய பாட்டுக்கள் தமிழில் இல்லாத தோஷந்தான்" என்று எழுதுகிறது. தமிழ்நாட்டிலே, தமிழர் முன்னால் பாட, போதிய பாட்டுக்கள் தமிழில் இல்லை! இதைவிட வெட்கக்கேடான நிலைமை வேறு இருக்க முடியுமா என்று கேட்கிறோம். தமிழனின் தன்மானம் இருக்கும் விதம் இது?