பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சி.என். அண்ணாதுரை வேறு யாரும் இழக்கவுமில்லை. தமிழனின் இன்றைய நிலை. இழந்த இன்பத்தைப் பற்றி எண்ணி ஏங்குவதாகவே இருக்கிறது. தமிழிலே நல்ல பாடல்கள் இல்லை என்பதைக் கேட்கும் தமிழன், தமிழ் இசை இன்னமும் இருந்த தன்மையை அறிந்தால், தலையைக் கவிழ்த்துக் கொள்ளத்தான் வேண்டி வரும். அத்தகைய இசை இருந்தது; இன்று மறைந்தது! மறைந்தது மீண்டும் வெளிப்பட இன்று முயற்சிகள் செய்யப்படுகின்றன; அந்த மொகஞ்சதாரோவைக் கண்டு ஆரியர்கள் மருளுகின்றனர். "தமிழர் காட்டுமிராண்டிக் கூட்டம். அவர்களுக்கு நாங்களே நாகரிக போதனை செய்தோம். தமிழ்மொழி வளமறியாக் கூட்டம். நாங்களே நூற்கள் வகுத்தோம்! தமிழர் வாழும் முறை தெரியாக் கூட்டம். நாங்களே அவர்களுக்குச் சட்ட திட்டம், கட்டுக்காவல் கற்றுக் கொடுத்தோம் என்று ஆரியர் கூறினர் ஆங்கிலேயரிடம். புத்தகங்களில் எழுதினர்; பொதுக் கூட்டங்களில் பேசினர். தமிழருக்கு ஆசான் ஆரியரே என்று வெளிநாட்டாரிடம் கூறவே, வெளிநாட்டார் தமிழரை, ஒர் "லம்பாடிக் கூட்டம் என்றே எண்ணினர். ஒரு ராகவ ஐயங்கார். தமிழருக்குக் "கற்பு" என்பதே தெரியாது என்றும் கூறத்துணிந்தார்! எழுச்சி தோன்றியது ஜெர்மன் நாட்டு மாக்ஸ்முல்லர், ஆரிய வர்த்தம், ஆரியமொழி, ஆரிய நாகரிகம், ஆரிய மதம் என்பவைகளையே ஐரோப்பியருக்கு எடுத்துக் கூறினார். தமிழர் என்ற உணர்ச்சி மங்கிற்று. ஆரியரின் பிரசாரம் ஆங்கில நாட்டவரையும் மயக்கிற்று. விபசாரியிடம் சிக்கி வீட்டிலுள்ளோரை இழிவுபடுத்திவிட்டுப் பொருளைப் பாழாக்கும் காமாந்தக்காரனின் கதை போல, ஆரியரிடம் மயங்கிய ஆங்கிலேயன், நாட்டுக்குடையவர்களாகிய