பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119



மானார்மாட்டுக் கொண்டுள்ள பேரன்பையும் இஸ்லாத் தின் மீதுள்ள இணையிலாப் பற்றையும் விண்டுரைப்பா தாயுள்ளது. அதிலும் திருமறை வசனங்களின் பிழிவாகப் பாடல்களை அமைத்திருப்பது எண்ணத்தக்கதாகும்

.

'இரவுசுல்கூல் படைப்போர்' இலக்கியத்தின் தலைவியாகிய சன்னி சல்காவை முன்னிருத்தியே பெண்களைப் பற்றிய வர்ணனைகளை விரிவாகச் செய்ய வேண்டிய நிலை. இதனை மிகச் சிறப்பாகச் செய்து காவியத்துக்கு மெருகூட்டி விடுகிறார். அதிலும் பிற இலக்கியங்களில் வரும் காப்பியத் தலைவியரை அடிமுதல் முடிவரை விஸ்தாரமாக வர்ணிக்கும் முறையையும் பின்பற்றக் கவிஞர் தவறவில்லை, ஆனால் இவ்வகையான வர்ணனைகளை சல்கா இஸ்லாத்தை ஏற்கு முன்னரே வர்ணித்துவிடுகிறார் இஸ்லாத்தோடு இணைந்த பின்னர் ஒரு முஸ்லிம் பெண்மணியை இவ்வாறு வர்ணித்துப் போற்றுவது இஸ்லாமிய நெறிகட்கு முரணானது என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

கன்னி சல்கா பன்மீன் நடுவண் அப்பன் மீனெனத் திகழும் சந்திரனின் தண்ணொளியும் பகலவனின் வெண்ளொளியும் மிக்காளாக விளங்குகிறாளாம். இவ்விரு ஒளியிணைந்த பேரொளிப் பிழம்பான மேனி எழிலோடு உரு வாக்கப்பட்டவரோ எனப் புலவர் ஐயுறுகிறார். புள்ளி பெய்த பட்டாடையணிந்து, பொன்னும் மணியும் பூண்டு அழகோவியமோ அன்றி அழகுத் திருவுருவோ என எண்ணி வியக்கும் வண்ணம் எழில் தோற்றமளித்தாள் என்பதை,

வெள்ளிக் கர சாம் விதுலமுதும்
வெய்யோன் கதிரும் சரிகலந்தே
தெள்ளித் தெளித்து வடித்ததனால்
தெரிவை யுருச்செய்து இயற்றியதோ