பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

என எழுதுவதன் மூலம் நல்லோர் உள்ளமெல்லாம் வருந்துவதோடு, ஈன்ற தன் உள்ளம் இத் தீச் செயல் கேட்டு துயரத்தால் உள்ளம் ஒடுங்குவதோடு கருத நேர்ந்த அவலத்தைச் சொல்லி வருந்துகிறார்.

அத்துடன் பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் மருள் நெறி நீங்கி அருள் நெறி சார்ந்து நாயகத் தடம்பற்றி, இறையுணர்வு பொங்க வாழ வழி காட்டுகிறார்.

'பாதகமுறும் குபிர் எனும் பகையகற்றி
வேதர் இறசூல் நபிதன் மெல்லடி இறைஞ்சப்
போதமுடனே வருதல் புந்தியென வெண்ணிக்
காதலொடு வம்மென வரைந்தனர் கரத்தால்"

முடங்கலை எழுதி முடிந்த அபூபக்கர் சித்திக் (ரலி) முர்ரத்தின் யோசனைப்படி தன் மனைவியை அணுகி, இதே போன்று தாங்கள் பெற்ற மைந்தர்க்கு தாய் என்ற நிலையில் கடிதம் வரைந்து தருமாறு கேட்டார். மனந் திறந்து கூறும் இருவர் சொல்லும் மைந்தனின் மனத்திலே மாற்றத்தை ஏற்படுத்தி நேர் வழி திருப்பும் எனக் கருதி அன்னையும் மடல் வரைந்தார்.

"அயிலுறுஞ் செழுங்கரத் ததிக மைந்தனே!
வயிறிடை உனைச் சுமந்து அளித்து வாயினில்
செயிரற அமுதமும் சிறப்ப ஊட்டும்தாய்
பயிரென வளர்த்தவப் பலனும இங்கிதோ"

எனக் கூறுகிறார். ஈரைந்து மாதங்கள் சுமந்து பெற்று, அமுதூட்டி வளர்த்த தாயின் பிரிவாற்றாமைத் துயர் எத்தகையது என்பதை சிந்தை கொள் மொழியில் கூறுகிறார்.

மேலும், உடன் பிறந்த நங்கை நல்லாள் ஆயிஷாவை அவனி புரக்க வந்த அண்ணலார்க்கு மண முடித்ததால் தாங்கள் பெற்ற மகிழ்வை நலத்தைச் சொற் சித்திரமாகத் தீட்டிக் காட்டும் வகையில்,