பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201



நூலகங்களிலும் நூல் காப்பகங்களிலும் தொல் பொருளாய்வகங்களிலும் இருந்து வருவதாகக் கூறப்படுகின்றது. லண்டனிலுள்ள இந்திய அலுவலக நூலகத்தில் 1878-ல் எழுதப்பட்ட “சீறா நாடகம்” என்ற அரபுத் தமிழ் நூல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அரபுத் தமிழில் நூல்கள் மட்டுமல்லாது பத்திரிகைகளும் கூட வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தைவிட அரபுத் தமிழ் செல்வாக்கு இலங்கைவாழ் தமிழ் முஸ்லிம் பெருமக்களிடையே மிகுதியாக இருந்துள்ளது. தமிழகம் போன்றே இலங்கையிலும் அரபுத் தமிழிலே வார , மாத ஏடுகள் நீண்டகாலம் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை செழுமையாக வளர்ந்துவந்த அரபுத் தமிழ் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்குப் பின்னால் மக்களால் புறக்கணிக்கப்படும் நிலையை எய்தியது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

அரபுத் தமிழ் நூல்கள் கையினால் மட்டுமே எழுதப்படக் கூடியவையாக இருந்து வந்தன. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்பட்ட அச்சு வாகனப் பெருக்கத்தின் காரணமாக அரபுத் தமிழில் எழுதுவது வெகுவாகக் குறைந்து விட்டது.

மேலும், அரபுத் தமிழ்நடை ஒரளவு பேச்சு வழக்குத் தமிழை அடியொற்றி எழுந்து வளர்ந்ததால் 'கொச்சைத் தமிழ்’ தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் விரைந்து எழுந்த தமிழ் உணர்வும் மொழித்திறமும் மற்றவர்களைப் போன்றே இஸ்லாமியர்களையும் ஆட்கொண்டது. ஆகவே, கொச்சைத் தமிழ் கலந்த அரபுத் தமிழ் அறவே புறக்கணிக்கப்பட்டது.

ஆனால் இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம்களிடையே அரபுத் தமிழ் செல்வாக்குக் கணிசமாக குறைந்துள்ள-