பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

ஆசிரியரால் எடுத்தோதப்படுகின்றன.எனவே இந்நூலுக்கு "ஆயிர மசலா" எனப் பெயரிடப்பட்டது பொருத்தமே எனக் கருதப்படுகின்றது.

இந்நூலில் உள்ள 'பதிக வரலாறு’ என்னும் பகுதியில் உள்ள பத்துப் பாடல்களில் பெருமானாரின் வாழ்வைச் கருக்கமாகக் கூறிவிடுகிறார் அடுத்து வரும் நாற்பத்தியாறு பாடல்கள் மூலம் இந்நூலுக்கான பின்னணி காரண காரியங்களோடு அமைக்கப்படுகிறது. அதன் பின்னுள்ள பாடல்கள் யூத அறிஞர் அப்துல்லா இப்னு சலாமுக்கும் பெருமானாருக்கும் இடையே வினா-விடை வடிவில் நடை பெறும் விவாதங்களாகும்.

நூற்பயன் கூறவந்த ஆயிர மசலா ஆசிரியர்,

"மூதறிவுண்டாம் நாளும்
    முதல்வன் கிருபை தோன்றும்
தீதரும் துன்பம் தீரும்
    செல்வமும் சிறப்பும் உண்டாம்
பூதலத்து உயிர்கள் யாவும்
     புகழ்ச்சியும் மகிழ்ச்சியான
ஆதியை இரசூல் தம்மை
     அகமகிழ்ந்து அருளுவோர்க்கே"

எனக் கூறுவதன் மூலம் இந்நூல் கற்போர் பெறுகின்ற நூற் பயனை தொடக்கத்திலேயே சுட்டிச் செல்கின்றார்.

அப்துல்லா இப்னு சலாம் என்பவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். இவர் 'கைபார்’ எனும் நகரில் வாழ்ந்து வந்தவர். கல்வியறிவு நிறைந்தவர்; அக்காலத்தில் சிறந்து விளங்கிய அறிஞர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். தன் காலத்துக்கு முன்னர் இறைவன் தன் நபிமார்கள் மூலம் அனுப்பிய சபூர், தவ்ராத், இன் ஜீல் ஆகிய வேதங்களில் மிகுந்த தேர்ச்சியும் நிறை புலமையும் உள்ளவர். இவ்வேதங்-