பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

இனிமையாக அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கதை நிகழ்ச்சிச் சூழ்நிலைகளை மனக்கண் முன் கொணர்ந்து. அங்கு நடைபெறும் காட்சிகளை நேரில் கண்டு மகிழுமாறு செய்து விடுகிறார் ஆசிரியர். குதிரைகள் குளம்பொலி கிளப்பி விரைந்து செல்வதை வர்ணிக்கும் பொழுது.

"செந்தூள் பறந்து துளசி எழும்பிட
       சூரர்கள் கண்டார்கள்
கருந்துாள் பறந்து தூசி எழும்பிட
       கண்டார் அந்நேரம்"

என ஓசை நயம் ததும்ப எளிமையாகவும் தெளிவாகவும் கூறி இன்புறுத்துகிறார்.

வேட்டைக்கெனச் சென்ற ஹனீபு வீடு திரும்பாததைக் கண்டு வேதனையுற்ற தாயார், அவரைத் தேடி செல்கின்றார். அப்போது சைத்தூனைச் கந்தித்த ஹனிபீன் தாயார், சைத்துானின் போக்குக் குறித்து.

"காட்டுக்கு வேட்டையாட நீ வந்த
     காரியம் ஒன்றும் இல்லை
வீட்டுக்குள்ளிருந்து நீ நூலினை நூற்பது
     உனக்குத் தகுந்த வேலை"

எனக் கூறுவதாக அமைந்துள்ள கூற்று சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

இவ்வறிவுறுத்தலின் வாயிலாகப் பெண்கள தங்கள் மெல்லியல்புகளுக்கேற்ற எளிய பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். மாறாக ஆயுதமேந்திப் போர் புரிதல் போன்ற வன்மைக் காரியங்களில் பெண்கள் ஈடுபடுவது இறைவன் விதித்த நியதிகளுக்கும் பெண்ணுடலின் மெல்லிய இயல்புத் தன்மைக்கும் மாறானது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்