உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

13


ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.

ஒரு பொழுது சட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி.

ஒரு மயிர் போனாலும் கவரிமான் வாழாது.

ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.

ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா? 6010

ஒரு மரத்துப் பழம் ஒரு மரத்தில் ஒட்டுமா?

ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?

ஒரு மரத்தை அதன் கனியால் அறியலாம்.

ஒரு மரம் இரண்டு பாளை, ஒன்று நுங்கு; ஒன்று கள்; அறிவுடன் பார்க்கும் போது அதுவும் கள்ளே; இதுவும் கள்ளே.

ஒரு மரம் தோப்பு ஆகுமா? 6015

ஒரு மனப்படு: ஓதுவார்க்கு உதவு.

(ஒருவர்க்கு உதவு)

ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.

ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.

ஒரு மிளகைப் போட்டு விட்டுப் பொதி மிளகு என்னது என்றாற்போல.

ஒரு முத்தும் கண்டறியாதவனைச் சொரிமுத்துப் பிள்ளை என்றானாம். 6020

ஒரு முருங்கையும் ஓர் எருமையும் உண்டானால் வருகிற விருந்துக்கு மனம் களிக்கச் செய்வேன்.

ஒரு முழுக்காய் முழுகிவிட வேண்டும்.

ஒரு முழுக்கிலே மண் எடுக்க முடியுமா?

(முத்து எடுக்க. எடுக்கிறதா?)

ஒரு முறை செய்தவன் ஒன்பது முறை செய்வான்.

ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும். 6025

ஒரு மொழி அறிந்தவன் ஊமை; பல மொழி அறிந்தவன் பண்டிதன்.

ஒரு ரோமம் போனாலும் கவரிமான் வாழாது.

ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால் பாசியம்,

(அகசியம்.)