பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தமிழ்ப் பழமொழிகள்


குருவுக்கு ஏற்ற சீடன்.

குருவுக்குத் துரோகம் செய்தாலும் குடலுக்குத் துரோகம் செய்யக்கூடாது.

குருவுக்கும் நாமம் குழைத்துப் போடுவான்.

குருவுக்கு நாமம் போட்டுக் கோபாலப் பெட்டியில் கைபோட்டது போல.

குருவுக்கு மிஞ்சின சிஷ்யன். 8990


குருவும் தாரமும் கொண்டவன் தவம்.

குரு வேஷம் கொண்டவன் எல்லாம் குரு ஆவானா?

குரைக்காத நாய் குதிகாலைக் கடிக்கும்.

குரைக்காத நாயையும் அசையாத நீரையும் நம்பாதே.

குரைக்கிற நாய் ஆனாலும் பட்டியைக் காக்கட்டும். 8995


குரைக்கிற நாய்க்கு எல்லாம் கொழுக்கட்டை போட முடியுமா?

குரைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற் போல.

(எலும்புத் துண்டைப் போடு.)

குரைக்கிற நாய்க்கு ஒரு துண்டுக் கருப்பட்டி.

குரைக்கிற நாய்க்குக் குத்துச் சோறும், சிலைக்கிற புண்ணுக்குப் பொட்டு எண்ணெயும் தேவை.

குரைக்கிற நாய்க்குக் கொழுக்கட்டை போட்டாற் போல. 9000


குரைக்கிற நாய்க்குப் பிண்டம் போடு; தானே ஓடிப் போகும்.

குரைக்கிற நாய் கடிக்காது.

(கடிக்கிறது அரிது.)

குரைக்கிற நாய் கடிக்காது; இடிக்கிற மேகம் பெய்யாது.

குரைக்கிற நாய் குதிகாலைக் கடிக்கும்.

குரைக்கிற நாய் வேட்டைக்கு உதவாது. 9005

(ஆகாது, வேட்டை பிடிக்குமா?)


குரைக்கிற நாயின் வாயிலே கோலைக் கொடுத்தால் ஊர் எங்கும் கொண்டோடிக் குரைக்கும்.

குரைக்கிற நாயை அடித்தால் இன்னம் கொஞ்சம்கூடக் குரைக்கும்.

குரைக்கிற நாயைக் கண்டு பயப்படாதே.

குரை குரை என்றால் குரைக்காதாம் கொல்லக்குடி நாய்; தானாகக் குரைக்குமாம் தச்சக்குடி நாய்.

குரைத்தால் நாய்; இல்லாவிட்டால் பேய். 9010