பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தமிழ்ப் பழமொழிகள்


குலாம் காதருக்கும் கோகுலாஷ்டமிக்கும் என்ன சம்பந்தம்?

குலை நடுங்கப் பேசினால் அலமலந்து போகும்.

குழக்கட்டைக்குத் தலை பார்த்துக் கடிப்பதுண்டா?

குழக்கட்டைக்குத் தலையும் இல்லை; குறவனுக்குக் குறையும் இல்லை.

(கூத்தாடிக்கு.)

குழக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர்

குருதட்சினையா? 9040


குழக்கட்டை தின்ற பூனைக்குக் குடுவை மோர் வரதட்சிணை.

குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே.

குழந்தை இல்லாத வீடு சுடுகாடு.

குழந்தை உள்ள வீடு கோவில்.

குழந்தைக் காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் பொல்லா. 9045


குழந்தைக்காரன் குழந்தைக்கு அழுதால் பணிச்சவன் காசுக்கு அழுதானாம்.

குழந்தைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.

குழந்தை காய்ச்சலும் குள்ளன் காய்ச்சலும் பொல்லாதவை.

(குண்டன் காய்ச்சலும்.)

குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு லாபம்.

குழந்தை நோய்க்கு வஞ்சகம் இல்லை. 9050


குழந்தைப் பசி கொள்ளித் தேள்.

(கொள்ளி போலே.)

குழந்தைப் பசியோ? கோவில் பசியோ?

குழந்தைப் பட்டினியும் கோயில் பட்டினியும் இல்லை.

குழந்தைப் பாலை வெடிப்பிலே வார்க்கிறதா?

குழந்தைப் பிடியோ? குரங்குப் பிடியோ? 9055


குழந்தை பிறக்குமுன் பேர் இடுகிறதா?

குழந்தை மலத்துக்குக் குட்டி நாய் வந்தது போல.

குழந்தையின் காதிலே திருமந்திரம் உபதேசித்தாற் போல்.

குழந்தையின் தேகம் போல.

குழந்தையின் முகமும் வாடக் கூடாது; குலுக்கையின் நெல்லும் குறையக் கூடாது. 9060