பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தமிழ்ப் பழமொழிகள்


கூழ் குடிக்கிறாயா அப்பா? குறுணி குடிப்பேன் குப்பா.

கூழ் குடித்த குழந்தை குந்தாணி.

கூழ் குடித்தவன் ஆனான்; குந்தித் தின்றவன் குடியால் மடிந்தான்.

கூழ் குடித்தால் குந்தாணி, கஞ்சி குடித்தால் கழுக்காணி.

கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்க வேண்டும். 9305

(குட்டு-இரகசியம்.)


கூழ் குடித்தாலும் கூட்டு ஆகாது.

கூழ் சுடுகிறது, கீரைக்குக் கேடு.

கூழ் சுடுகிறதென்று ஊதிக் குடிக்கிற வேளை.

கூழ்ப் பதனிப் பானையில் கைவிட்டவன் விரலைச் சப்பாமல் வேட்டியிலா துடைப்பான்?

கூழ் புளித்தது, பால் கூடப் புளித்ததென்று விட்டு விடாதே. 9310


கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமல் சொல்லலாமா?

கூழாய் இருந்தாலும் மூடிக் குடி.

கூழிலே விழுந்த ஈ குழம்புகிறது போல.

கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும் பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும் ஒரே அழுகை.

(விதனம் ஒன்றே.)

கூழுக்குக் குட்டிச் சுவரோடு போனவனே! 9315


கூழுக்குக் குறடு மாங்காய்.

(மிளகாய்.)

கூழுக்குப் பாடிக் குடியைக் கெடுத்தான்.

கூழுக்கும் ஆசை; மாவுக்கும் ஆசை.

கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.

கூழுக்கும் கொழுக்கட்டைக்கும் ஒன்றே குறி. 9320


கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்; குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.

கூழுக்கு மாங்காய் தோற்குமா?

கூழும் பஞ்சமோடி? கொடுமை மாமியாரே!

கூழைக் குடிக்கிறாயா அப்பா? குறுணி குடிப்பாய் அப்பா!

கூழைக் குடித்தாலும் குப்பையைச் சுமந்தாலும் குப்பைக் காட்டுப் பெண் ருக்குமிணி; பாலைக் குடித்தாலும் பட்டுக்