உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தமிழ்ப் பழமொழிகள்


கோணல் கொம்பு ஏறி என்ன? குதிரை மீது ஏறி என்ன? வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம். 9940


கோணல் வாயன் கொட்டாவி விட்டாற்போல. கோணா மாணாப் பெண்டாட்டி மாணிக்கம் போலப் பிள்ளை பெற்றாள்.

கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமல் காணி கொடுப்பது மேல்.

(நல்லது.)

கோணி கொண்டது; எருது சுமந்தது.

கோத்திர ஈனன் சாத்திரம் பார்ப்பான். 9945


கோத்திரத்திலே குரங்கு ஆனாலும் கொள்.

(கோத்திரத்திலே கிடைத்தால்.)

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு; பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

கோப்பாயில் நாய் குட்டிச் சுவரில் ஏறியது போல.

(கோப்பாய்-இலங்கையில் ஓர் ஊர்.)

கோப்புத் தப்பினால் குப்பையும் பயிராகாது.

கோபத்தில் அறுத்த மூக்குச் சந்தோஷத்தில் வருமா? 9950


கோபம் ஆறினால் குரோதம் ஆறும்.

கோபம் இல்லாத துரைக்குச் சம்பளம் இல்லாத சேவகன்.

கோபம் இல்லாத துரையும் சம்பளம் இல்லாத சேவகனும்.

கோபம் இல்லாத புருஷனும் புருஷன் அல்ல; கொதித்து வராத சோறும் சோறு அல்ல.

கோபம் இல்லாத ராசாவும், சம்பளம் இல்லாத மந்திரியும். 9955


கோபம் இல்லாதவனைக் குரு காப்பார்.

கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

(இருக்கும்.)

கோபம் உள்ள இடத்தில்தான் சந்தோஷம் இருக்கும்.

கோபம் எல்லாம் கொடுமைக்கு லட்சணம்.

கோபம் குடிகெடுக்கும். 9960

(எடுக்கும்.)


கோபம் சண்டாளம்.

(கோபம் பாபம் சண்டாளம்.)

கோபம் பாபம்; நித்திரை சத்துரு.