பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தமிழ்ப் பழமொழிகள்


கோமுட்டி சாட்சி.

கோமுட்டிப் பிசாசு பிடித்தால் விடாது. 9990


கோமுட்டிப் பிள்ளை வீணுக்கா நெய்ப்பல்லாயைப் போட்டு உடைக்கும்?

கோமுட்டி புத்திக்கு மோசம் இல்லை.

கோமுட்டி புத்திக்கு மோசம் லேது; மோசம் வந்தால் செப்ப லேது.

(லேது - இல்லை; தெலுங்கு.)

கோமுட்டியைச் சாட்சிக்குக் கூப்பிட்டது போல.

கோமுட்டி வீட்டுப் பெருச்சாளிக்குக் கொண்டதென்ன? கொடுத்ததென்ன? 9995

(கொண்டது கொடுத்தது தெரியாது.)


கோயில் அருகே குடி இருந்தும் கெட்டேன்.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி.

(திருவாரூரில்.)

கோயில் சாந்து ஒன்பது குளிக்கு மாறாது.

(சீரங்கத்தில்.).

கோயில் பூனைக்குப் பயம் ஏது? 10000


கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.

கோயிலையும் குளத்தையும் அடுத்திருக்க வேண்டும்.

கோர்ட்டுக்கு முன்னால் போகாதே; கழுதைக்குப் பின்னால் போகாதே.

கோரக்கல் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா?

கோரைக் கொல்லை பிடித்தவனும் மலடி ஸ்திரீயை மணந்தவனும் பயன் அடைய மாட்டார்கள். 10005


கோரை குடியைக் கெடுக்கும்.

கோரை முடி குடியைக் கெடுக்கும்.

கோல் ஆடக் குரங்கு ஆடும்; அதுபோல மனம் ஆடும்.

கோல் இழந்த குருடன் போல.

கோல் உயரக் கோன் உயர்வான். 10010


கோல் எடுக்கக் குரங்கு ஆடும்.

(கோல் ஆட.)

கோல் எடுத்த பிள்ளை குருட்டுப் பிள்ளை.

(கொடுத்த பிள்ளை. பிள்ளை தன் கண்ணைத் தானே குத்திக்கொள்ளும்.)