பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

223


சிட்டுக் குருவிக்கு ராமபாணமா?

(குருவிக்கு மேலே.)

சிட்டுக் குருவியா திருவணை அடைக்கப் போகிறது.

சிட்டுக்குருவியின்மேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?

சிட்டுக் குருவியின் தலையில் பனங்காயைக் கட்டினது போல.

சிட்டுக் குருவியின் மேல் ராம பாணம் தொடுக்கிறதா? 10685

(நாராயணாஸ்திரம்.)


சிட்டுக் குருவியைத் நூக்குவானேன்? அது கொண்டையை ஆட்டிக் கொத்த வருவானேன்?

சிடுக்குத் தலையும் சொடுக்குப் பேனும்.

சிடுக்குப் பெருத்தால் கொண்டை பெருக்கும்; தாயார் செத்தால் வயிறு பெருக்கும்.

சிண்டு முடிந்து விடுகிறான்.

சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம். 10690


சிணுங்குகிறது எல்லாம் பூசைக்கு அடையாளம்.

சித்தன் போக்குச் சிவன் போக்கு; ஆண்டி போக்கு அதே போக்கு.

சித்தன் போக்குச் சிவன் போக்கு, பித்தன் போக்குப் பெரும் போக்கு

(சித்தம் போக்கு.)

சித்தி பெறாத மருந்தும் மருந்தோ? பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?

சித்திரச் செந்தாமரையை ஒத்திட முகம் மலர்ந்தது. 10695


சித்திரத்தில் எழுதிய செந்தாமரைப்பூப் போல.

சித்திரத்தில் வைத்து எழுதாத சோழியனைத் தொப்பூர்ச் சத்திரத்தில் ஏன் வைத்தாய், சண்டாளா?

சித்திரத்திலும் சோழியன் ஆகாது.

சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கே.

சித்திரத்தைக் குத்தி அப்புறத்தே வைப்பான். 10700

(சித்திரத்தைத் தோண்டி.)


சித்திரப் பதுமைபோல் பிரமிக்க.

சித்திரபுத்திரனுக்குத் தெரியாமல் சீட்டுக் கிழியுமா?

(சித்திரகுப்தனுக்கு.)

சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்.

சித்திர வேலைக்காரனுக்குக் கை உணர்த்தி; தெய்வப் புலவனுக்கு நா உணர்த்தி.

சித்திராங்கி பொம்மா, சின்ன வேங்கடம்மா. 10705