பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

227


சில்லறைப் பேர்வழி.

சில்லறை வைத்தியம்.

சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினோர். 10780


சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?

சிலு உண்டானால் சேவகம் உண்டு.

சிலுக்கச் சிலுக்கக் குத்துகிறது எல்லாம் சித்திரத்துக்கு அழகு.

சிலேட்டுமத்தில் அகப்பட்ட ஈயைப் போல.

சிவக்க முற்றின வாழைக்காய் புளியில்லாமல் இனிக்கிறது. 10785


சிவசிவா, திருப்பிப் போட்டு அடித்தால் சாகும் என்றான் சந்நியாசி.

சிவப்பு ஓர் அழகு; சூடு ஒரு மணம்.

(ருசி.)

சிவப்புப் பறையனையும் கறுப்புப் பிராமணனையும் நம்பல் ஆகாது.

சிவப்பே அழகு; சுடுகையே ருசி.

சிவபூஜை வேளையில் காடியை விட்டாற் போல. 10790

(கரடியிருந்தது போல. கெருடி.)


சிவராத்திரியோடு பனி சிவா சிவா என்று போகும்.

சிவலிங்கத்தின்மேல் எலி போல.

சிவன் என்றால் சிவனுக்குக் கோபம், ஹரி என்றால் ஹரிக்குக் கோபம்.

சிவன் சொத்துக் குலநாசம்.

சிவனுக்கு மிஞ்சின தெய்வம் இல்லை:

சித்தியாருக்கு மிஞ்சின சாஸ்திரம் இல்லை. 10795


சிவனே என்று இருந்தாலும் தீவினை விடவில்லை.

சிவனை நினைத்து ஆர் கெட்டார்?

சிவாய நம என்பவருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை.

சிவியான் ராஜவட்டம் போனது போல.

சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும்; சுமக்கவும் வேண்டும். 10800


சிற்றப்பன் விட்டுக்குப் போய்ச் சிற்றாடை வாங்கி வரலாம் என்று போனாளாம்; சிற்றப்பன் பெண்சாதி ஈச்சம் பாயை இடுப்பில் கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம்.

சிற்றப்பா சீராட்டிக் கண்ணிலே சுட்டானாம்.

சிற்றம்மை சீராட்டிக் கண்ணைக் சொருகினாளாம்.