பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

241


சும்மா இருந்த உடம்பிலே சுண்ணாம்பைத் தடவிப் புண்ணாக்குவானேன்?

சும்மா இருந்த நாய் சுருக்கில் போய்த் தொங்கியதாம்.

சும்மா இருந்தால் ஏதும் சாதிக்கலாம். 11090


சும்மா இருந்தால் சோறு ஆமா? வாடா சித்தா கால் ஆட்ட.

சும்மா கலம் சுமக்க மாட்டாதவன் நனைந்தால் முக்கலம் சுமப்பானா?

சும்மா கிடக்கிறதாம் சீவல்கட்டை, தூக்கிப் போட்டதாம் வெறும் கட்டை.

(கல அரிசி.)

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.

சும்மா கிடக்கிற தரையை ஊதிக் கெடுத்தான் தாதன். 11095

(அம்மான்.)


சும்மா கிடந்தால் ஆர் அறிவார்? வாடா திம்மா, தாலாட்ட.

சும்மா கிடைக்குமா சோணாசலன் பாதம்?

(சொர்க்கலோகம்.)

சும்மா கிடைத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கிறதா?

சும்மா கிடைத்தால் எனக்கு ஒருத்தி; எங்கள் அப்பனுக்கு ஒருத்தி.

(எனக்கு ஒன்று; எங்கள் அண்ணனுக்கு ஒன்று.)

சும்மா கிடைத்தால் எனக்கு ஒரு வைப்பாட்டி:எங்கள் சிற்றப்பாவுக்கு ஒரு வைப்பாட்டி என்றானாம். 11100


சும்மாட்டுக்கும் சும்மா இருப்பவனுக்கும் என்ன தெரியும்?

சும்மா போகிறவனைப் பிடிப்பானேன்? ராத்திரி எல்லாம் கிடந்து பிதற்றுவானேன்?

சும்மா வந்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பாராதே.

(சும்மா விற்ற, பார்ப்பதா?)

சும்மா வந்தால் சிற்றப்பனுக்கு ஒன்று.

சுமந்த தலையும் சும்மாடுமாய்த் திரிகிறது. 11105

(திண்டாடுகிறது.)


சுமந்தவன் தலையிலே சும்மாடு.

சுமந்தவன் தலையிலே பத்துச் சுமை.

சுமப்பவன் அல்லவோ அறிவான் காவடிப் பாரம்?

சுமை இழந்தாருக்குச் சுங்கம் இல்லை.

சுமை கனத்தால் முன்னது பின்னதாகப் பேசுகிறதா? 11110