பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தமிழ்ப் பழமொழிகள்


கடன் வாங்கினவன் மடியில் கல நெருப்பு.

கடன் வாங்குகிறபோது இனிப்பு; கடன் கொடுக்கிறதென்றால் கசப்பு.

கடன் வாங்குகிறவன் கடைத்தேற மாட்டான்.

கடனாகக் கிடைக்கிறதானாலும் ஆனையை வாங்கிக் கட்டிக் கொள்வதா? 6525


கடனா உடனா வாங்கிக் காரியத்தை முடி.

கடனோடு கடன் ஆகிறது; அண்டை வீட்டில் மேல் சீட்டு ஆகிறது; பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணு.

கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.

(கதம்பப் பொடி.)

கடனோடே கடன்; உடனோடே உடன்.

கடன் ஆனாலும் உழக்குப் பால் கறக்காதா என்கிறான். 6530


கடா இடுக்கில் புல் தின்கிறது போல.

கடா கடா என்றால் கால் ஆழாக்குப் பீச்சு என்கிறாயே!

கடா கடா என்றால் உழக்குப் பால் என்று கேட்கிறாயே!

கடா கடா என்றால் கன்றுக்கு உழக்குப் பாலா என்கிறான்.

கடா கடா என்றால் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான். 6535


கடா கன்று போட்டது; கொட்டகையிலே பிடித்துக் கட்டு.

கடாச் சண்டையில் உண்ணி நசுங்கின கதை.

கடா பின் வாங்குவது எல்லாம் பாய்ச்சலுக்கு இடம்,

(அடையாளம்.)

கடா பொலிகிறது வண்டி பால் குடிக்கவா?

கடா மிடுக்கிலே புல்லுத் தின்கிறதா? 6540


கடா மேய்க்கிறவன் அறிவானோ, கொழுப் போன இடம்?

கடாரங் கொண்டான் கிணற்றில் கல்லைப் போட்டது போல.

(கடாரங் கொண்டான், செம்பொன்னார் கோயிலுக்கு அருகில் கிழக்கே உள்ள ஊர்.)

கடாவின் சந்தில் புல்லைத் தின்னுகிறது போல.