உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



58

தமிழ்ப் பழமொழிகள்


கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொண்டாலும் உள்ளே செவ்வரக்குப் பாய்ச்சியிருப்பான்.

கம்மாளன் பசுவை காதறுத்துக் கொள்.

கம்மாளன் பசுவைக் காது அறுத்து வாங்கு. 6960

(கொள்வானாம்.)

கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ள வேண்டும்.

கம்மாளன் பணம் கரியும் பொறியுமாய்ப் போய் விட்டது.

கம்மாளன் பல்லக்கு ஏறினால் கண்டவர்க்கு எல்லாம் இறங்க வேண்டும்.

கம்மாளன் பிணத்தைக் காது அறுத்தாலும் ரத்தம் வராது.

கம்மாளன் வீட்டிற் பிள்ளை பிறந்தால் தேவடியாள் வீட்டில் சர்க்கரை வழங்குவாள். 6965

(விலை மகள் தெருவில்.)

கம்மாளன் வீட்டு நாய் சம்மட்டிக்கு அஞ்சுமா?

கம்மாளன் வீட்டுப் பசுவை காதறுத்துப் பார்த்தாலும் அங்கும் செவ்வரக்குப் பாய்ந்திருக்கும்.

கமரில் ஊற்றிய பால்.

கமரில் கவிழ்த்த பால், அமரர்க்கு அளித்த அன்னம். 6970

கயா கயா.

கயிற்றுப் பிள்ளை, கைப்பிள்ளை.

(கயிற்றுப் பிள்ளை-மனைவி.)

கயிற்றைப் பாம்பு என்று எண்ணிக் கலங்குகிறது போல.

கயிறு அறுந்த பட்டம் போல.

கயிறு இல்லாப் பம்பரம் போல. 6975

கயிறு திரிக்கிறான்.

கர்ணன் கொடை பாதி, காவேரி பாதி.

கர்ணனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.

(கர்ணன்-கணக்கப்பிள்ளை.)

கர்த்தனைக் குருடன் கண்தான் வேண்டுவான்.

கர்த்தா, போக்தா, ஜனார்த்தனா, 6980

கர்த்தாவின் செயல் உள்ளபடி.