பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



65

தமிழ்ப் பழமொழிகள்


கல்யான வீட்டில் ஆறு மாதம் கருப்பு.

கல்யாண வீட்டில் கட்டி அழுகிறவள் இழவு வீட்டில் விட்டுக் கொடுப்பாளா?

கல்யாண வீட்டிலே கட்டி அழலாமா?

கல்யாண வீட்டிலே பந்தற்காலைக் கட்டி அழுகிறவன் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?

கல்யாண வீட்டிலே பிள்ளை வளர்த்தாற்போல். 7140

கல்யாண வீட்டிற்குப் போய் அறியான்; மேளச்சத்தம் கேட்டு அறியான்.

கல்யாண வீட்டுக் கறி அகப்பை, சாவு வீட்டுச் சோற்று அகப்பை.

கல்யாணி என்கிற பெண்ணுக்குக் கல்யாணமும் வேண்டுமோ?

கல்லடி சித்தன் போன வழி காடு மேடு எல்லாம் தவிடுபொடி.

கல்லன் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு. 7145

கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே

(வெற்றி வேற்கை.)

கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே,

(மல்லாடாதே.)

கல்லாதவரே கண் இல்லாதார்,

கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

கல்லாமல் குல வித்தை பாதி வரும். 7150

கல்லார் உறவிலும் கற்றார் பகை நலம்.

கல்லார் உறவு அகல்; காமக் கடல் கட.

கல்லாலே கட்டிச் சாந்தாலே பூசியிருக்கிறதா?

கல்லில் நார் உறிப்பவன்.

கல்லில் நெல் முளைத்தாற்போல. 7155

(அருமைப்பாடு, )

கல்லிலும் வன்மை கண்மூடர் நெஞ்சு.

கல்லிலே நார் உரிக்கிறது போல.