பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

81

 களக்காடு மடக்ராமம், அன்ன வஸ்த்ரம் ஜலம் நாஸ்தி; நித்யம் கலக மேவச.

களஞ்சியத்தில் பெருச்சாளி சாப்பிடுவது போல.

களம் காக்கிறவனை மிரட்டுவானாம், போர் பிடுங்குகிறவன்.

களர் உழுது கடலை விதை.

களர் கெடப் பிரண்டை இடு. 7475


களர் நிலத்தில் கரும்பு வை.

களர் நிலத்திலே சம்பா விளையுமோ?

களர் முறிக்க வேப்பந் தழை.

களரை ஒழிக்கக் காணம் விதை.

(காணம் - கொள்.)

களரை நம்பிக் கெட்டவனும் இல்லை; மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. 7480


களவாண்டு பிழைப்பதிலும் கச்சட்டம் கழுவிப் பிழைக்கலாம்.

களவு ஆயிரம் ஆனாலும் கழு ஒன்று.

களவுக்கு ஒருவர்; கல்விக்கு இருவர். களவு கற்றாலும் தன்னைக் காக்க வேண்டும். 7485


களவு கொண்டு ஆபரணம் பூண்டாற் போல.

களவும் கற்று மற.

(கத்து மற.)

களி கிளறிக் கல்யாணம் செய்தாலும் காளியண்ணப் புலவனுக்குப் பத்துப் பணம்.

(பூந்துறைப் பகுதி வழக்கு.)

களியப் பேட்டை களக்ராமம்.

(செட்டிபாளையத்துக்கு அக்கரை.)

களிறு பிளறினால் கரும்பைக் கொடு.

களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா? 7490


களை எடாப் பயிர் கால் பயிர்.

களை எடாப் பயிரும் கவடுள்ள நெஞ்சும் கடைத்தேறா.