உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தமிழ்ப் பழமொழிகள்

 கன்னா பின்னா என்று பிதற்றுகிறான்.

கன்னான் கொண்டது. கடை கொண்டது.

கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான். 7625


கன்னானுக்கும் குயவனுக்கும் ஜன்மப் பகை

கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற் போல.

கன்னி அறிவாளோ காம ரசம்?

கன்னி இருக்கும் பொழுது காளை மணை ஏறக் கூடாது.

(மணம் பேசலாமா? கன்னி இருக்க.)

கன்னிக் காற்றுக் கடலும் வற்றும். 7630


கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்.

கன்னிச் சேற்றைக் காய விடாதே; கண்ட மாட்டைக் கட்டி உழு.

(கன்னி-புரட்டாசி. புரட்டாசியில் வெயில் கொடூரம், மழையும் உண்டு. வயலில் சேறாக உழுதாலும் உடனுக்குடன் காய ஆரம்பிக்கும். அம் மாதங்கள் வெயில் மழை இரண்டும் தாங்கிக் கடினமான வேலை செய்ய எருமைக் கடாவே தகுதி. அதைக் கட்டித்தான் ஏர் ஒட்டுவார்கள்.)

கன்னி நிலவிலே கட்டி ஓட்டடா கடா மாட்டை.

கன்னிப் பூ மலரவில்லை.

கன்னியாகுமரிக் கடலறியார்; சுசீந்திரம் தேரறியார். 7635

(விருந்தினர்களைக் கவனிப்பதனால்.)


கன்னியும் துக்கமும் தனிவழிப் போகா.

கன்னி வளரக் காடு எரிய.

கன ஆசை, கன நஷ்டம்.

கன எலி வளை எடாது.

கன எலி விளையாடாது. 7640


கனக மாரி பொழிந்தது போல.

கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.

கனத்தால் இனம் ஆகும்; மனத்தால் ஜனம் ஆகும்.

கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.

கனத்தைக் கனம் அறியும்; கருவாட்டுப் பொடியை நாய் அறியும். 7645