பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

448

Method) முறைப்படி இக்கருத்தே பொருத்தமாகப் புலப் படுகிறது. எப்படி?

முதற்காலத்தில் மக்கள் ஒருவர்க்கொருவர் தம் கருத்தை வாக்கியமாகவே பேசித்தெரிவித்துக் கொண் டனர். இன்றுங்கூட இப்படித்தானே ! தனி எழுத்தோ, தனிச் சொல்லோ ஒரு கருத்தை அறிவிக்க முடியாது. சில வேளைகளில் தனிச் சொல் ஒரு கருத்தை அறிவிப் பதுபோல் தோன்றினும், அந்தத் தனிச் சொல்லில் ஒரு வாக்கியம் கட்டாயம் மறைந்திருக்கும். எடுத்துக் காட்டாக, ஒருவர் 'தண்ணீர்' என்று ஒரு சொல் மட்டும் சொல்வாரேயானால், 'தண்ணீர் கொண்டு வா' என்று சொல்கிறார் என்பது கருத்து. எனவே, 'தண்ணீர்' என் னும் ஒரு சொல்லுக்குள் தண்ணீர் கொண்டு வா என் னும் ஒரு வாக்கியம் மறைந்திருப்பது பேச்சுப் பழக்கத் தால் புலனாகிவிடும். பேசுபவர் சில வேளைகளில் முயற் சிச் சிக்கனத்திற்காக, வாக்கியமாகப் பேசாமல் தனிச் சொல் சொல்கிறார் என்பதுதான் இதிலுள்ள உண்மை .

அவ்வளவு ஏன் ? தொடக்கத்தில் குழந்தைகளுங் கூட வாக்கியமாகத்தானே பேசுகிறார்கள்! இன்னுங் கேட்டால், குழந்தைகளின் குதலைப் பேச்சிலே சொற் களைத் தனித்தனி வடிவத்தில் அடையாளங் கண்டு பிடிக்க முடியாது; ஏதோ மொத்தையாக ஒலிகளின் சேர்க்கை தான் காதில் விழும் ; பிறகு நாளடைவி லேயே ஒவ்வொரு சொல்லின் உருவமும் பிரிவினை பிரிவினையாகப் புரியும்.

Tக

இது போலவே, மக்களினம் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன் குழந்தைப் பருவத்திலிருந்த (Basic Period) தொடக்க காலத்தில், ஏதேதோ ஒலிச்