பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் -(2) நனிபள்ளி நாயகரிடம் விடைபெற்றுக் 147 கொண்டு நம்பியாரூரர் செம்பொன் பன்ளி" என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். அத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி (பதிகம் இல்லை) நின்றியூர் வருகின்றார். "அற்றவனாரடியார்" (7.16) என்ற பதிகம் பாடித் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானை வழிபடு கின்றார். அற்றவ னாரடியார்தமக் காயிழை பங்கினராம் பற்றவ னாரெம் பராபரரென்று பலர்விரும்பும் கொற்றவ னார்குறு காதவரூர்நெடு வெஞ்சரத்தால் செற்றவ னார்க்கிடமாவது நந்திரு நின்றியூ3(1). என்பது பதிகத்தின் முதல் திருப்பாடல். "திருவும் வண்மை யும்" (7.65) என்று மற்றொரு பதிகமும் இத்தலத்து எம் பெருமானுக்கு உண்டு. அணிகொள் ஆடையும் பூணணி மாலை அமுதுசெய் தமுதம்பெறு சண்டி இனைகொள் ஏழெழு நூறிரும் பனுவல் ஈன்றவன்திரு நாவினுக் கரையன் 10. செம்பொன்பள்ளி (செம்பொனார் கோயில்): மயிலாடுதுறை-தரங்கம்பாடி இருப்பூர்தி வழியி லுள்ள நிலையம். உள்ள ஆன 11.நின்றியூர்(ஆனதாண்டவபுரம்):விழுப்புரம்-மயிலாடு துறை - தஞ்சை இருப்பூர்தி வழியில் தாண்டவபுரத்திலிருந்து 2கல் தொலைவிலுள்ளது.- திருமகள் இத்தலத்து எம்பொருமானைப் பூசித்ததைப் பாசுரம் (சுந்தரர் 7.65:5) கூறும். இத் தலப் பெருமானுச்கு சுந்தரரின் இரண்டு பதிகங்கள் (7.19;7.65) உள்ளன.