பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

103


“எனக்குப் புரிகிறது” என்று துக்கம் தோய்ந்த குரலில் சொன்னாள் தாய். “அட கடவுளே! நாம் இப்போது என்ன செய்வது?”

“அவர்கள் அநேகமாக எல்லாரையுமே பிடித்துவிட்டார்கள். அவர்கள் நாசமாய்ப் போக!” என்று சமையலறையிலிருந்து சமோய்லவின் குரல் ஒலித்தது. “நாம் நமது வேலையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான். இது நாம் கை கொண்டுள்ள லட்சியத்துக்காக மட்டும் அல்ல: நமது தோழர்களைக் காப்பாற்றுவதற்கும் கூடத்தான்!”

“ஆனால் வேலை செய்வதற்குத்தான் ஆளில்லை” என்று சிறு சிரிப்புடன் கூறினான் இகோர். “என்னிடம் அருமையான முதல்தரமான் பிரசுரங்கள் எல்லாம் இருக்கின்றன; எல்லாம் என் கைப்பட எழுதியவை. ஆனால் அவற்றை எப்படித் தொழிற்சாலைக்குள்ளே கொண்டு செல்வது—அதுதான் இன்னும் தீராத பிரச்சினை!”

“அவர்கள் தொழிற்சாலை வாசலில் ஒவ்வொருவரையும் சோதனை போட்டுத்தான் உள்ளே விடுகிறார்கள்” என்றான் சமோய்லவ்.

அவர்கள் தன்னிடமிருந்து ஏதோ பதிலை எதிர்பார்ப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

“எப்படி இதைச் செய்ய முடியும்? எப்படிச் செய்வது?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் அவள்.

சமோய்லவ் வாசல் நடைக்கு வந்தான்.

பெலகேயா நீலவ்னா, உணவு விற்கிறாளே, மரியா கோர் சுனவா அவளை உங்களுக்குத் தெரியும் அல்லவா?”

“ஆமாம். அதற்கென்ன?”

“அவளோடு பேசிப்பாருங்கள். ஒருவேளை அவள் அவற்றை உள்ளே கொண்டு போகக்கூடும்.”

ஒப்புக்கொள்ளாத பாவனையில் தாய் தலையை ஆட்டினாள்.

“இல்லையில்லை. அவள் ஒரு வாயாடி, அவள் அந்தப் பிரசுரங்களை என்னிடமிருந்துதான் பெற்றாள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் அந்தப் பிரசுரங்கள் இந்த வீட்டிலிருந்துதான் வந்தன என்பது தெரிய நேர்ந்தால்-அது முடியவே முடியாது!”

பிறகு அவள் திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சி பரவசத்தோடு பேசினாள்:

“அவற்றை என்னிடம் கொடுங்கள்; கொடுங்கள் என்னிடம் நான் பார்த்துக்கொள்கிறேன். நான் ஒருவழி செய்கிறேன் மரியாவை என்னை