உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

மக்சீம் கார்க்கி


இகோர் பதிலே பேசாமல் அறைக்குள் மேலும் கீழும் நடந்தான். பிறகு அவள் பக்கம் திரும்பிச் சொன்னான்.

“அம்மா. இது கஷ்டம்தான்! உங்களுக்கு எவ்வளவு கடினமாயிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.”

“எல்லோருக்கும்தான் கஷ்டமாயிருக்கிறது” எனக் கையை ஆட்டிக்கொண்டே பதிலளித்தாள் அவள். “புரிந்துகொண்டவர்களுக்கு அத்தனை சிரமமில்லை. எந்த நன்மைக்காக மக்கள் இப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நானும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிந்துகொண்டு வருகிறேன்.”

“அதை மட்டும் நீங்கள் உணர்ந்துகொண்டால் ஒவ்வொருவரும் உங்களை விரும்புவார்கள், அம்மா! ஒவ்வொருவரும் விரும்புவார்கள்” என்று மனப்பூர்வமாகச் சொன்னான் இகோர்.

அவள் அவனை லேசாகப் பார்த்து, புன்னகை புரிந்தாள்.

மத்தியானத்தில் அவள் தொழிற்சாலைக்குப் புறப்படத் தயாரானாள். போவதற்கு முன் அந்தப் பிரசுரங்களைத் தன் ஆடைகளுக்குள், வெளியே தெரியாமல் நாசூக்காக வைத்துக் கட்டிக்கொண்டாள். அவள் எல்லாவற்றையும் ஒளித்து வைத்துக்கொண்ட லாவகத்தைக் கண்டு திருப்தியோடு சப்புக் கொட்டினான் இகோர்.

“ஸேர் குட்!” என்று கத்தினான். முதல் புட்டி பீரைக் குடித்த உற்சாகத்தில் ஜெர்மானியர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள். “இந்த பிரசுரங்களை உடையிலேயே பொதிந்து வைத்துக்கொண்டதால், ஆள் வித்தியாசமாகத் தோன்றவில்லை, அம்மா! நீங்கள் இப்போதும் சதைவிழத் தொடங்கும் நடுத்தர வயதுப் பெண்போலவே நெட்டையாக இருக்கிறீர்கள்! விகாரம் தென்படவில்லை! கடவுள் உங்கள் சேவையை ஆசீர்வதிக்கட்டும்!”

அரைமணி நேரத்துக்குப்பின் அவள் தொழிற்சாலையின் வாசலில் நின்றாள். அமைதியும் நம்பிக்கையும் நிறைந்தவளாய்த் தன் கையிலுள்ள கூடைகளின் கனத்தால் குனிந்து போய் நின்றாள். தொழிற்சாலைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு தொழிலாளியையும் அங்கு நின்ற இரண்டு காவலாளிகளும் சோதனை போட்டு உள்ளே விட்டார்கள். இதனால் அந்தத் தொழிலாளிகள் கொதிப்படைந்து அந்தக் காவலாளிகளின் மீது தாறுமாறாக வசைமாரி பெய்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஒருபுறத்தில் படபடக்கும் கண்களும் சிவந்த முகமும் நீண்டுயர்ந்த கால்களும் கொண்ட ஒருவனும் போலீஸ்காரனும் நின்று கொண்டிருந்தார்கள். தாய் தனது அன்னக்காவடியின் நுகக்காலை ஒரு