பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

மக்சீம் கார்க்கி


“அவன் இதை எனக்காகத்தான் சொல்லுகிறான் என்று ஊகித்துக் கொண்டாள் தாய்.

“பறவைகள் சிறைவிட்டுப் பறக்கும். மக்கள் தளைவிட்டு நீங்கும் காலம் வரத்தான் போகிறது!”

ஒரு பெண் பிள்ளை ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து ரீபினின் முகத்தைக் கழுவினாள். கழுவும் போது ‘ஆ—ஓ’ என்று புலம்பினாள். அவளது இரங்கிய கீச்சுக்குரல் மிகயீல் பேசிய பேச்சோடு சிக்கி முரணியது. எனவே அவன் பேச்சைத் தாயால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. போலீஸ் தலைவன் முன்னால் வர, ஒரு சில முஜீக்குகள் முன்னேறி வந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவன் கத்தினான்.

“இந்தக் கைதியை ஒரு வண்டியில் போட்டுக் கொண்டு போவோம், சரி, இந்தத் தடவை யாருடைய முறைக்கட்டு?”

பிறகு அந்தப் போலீஸ் அதிகாரி தனக்கே புதிதான குரலில், புண்பட்டவனின் முனகல் குரலில் பேசினான்.

“ஏ, நாயே! நான் உன்னை அடிக்கலாம். ஆனால் நீ என்னை அடிக்க முடியாது!”

“அப்படியா? நீ உன்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்—கடவுள் என்றா?” என்று கத்தினான் ரீபின்.

உள்ளடங்கிப்போய்க் குழம்பிய கசமுசப்பு, அவனது குரலை மூழ்கடித்து விழுங்கிற்று.

“தம்பி. அவரோடு வம்பு பண்ணாதே. அவர் ஓர். அரசாங்க அதிகாரி.”

“நீங்கள் அவன் மீது கோபப்படக்கூடாது. எசமான்! அவன் தன் நிலையிலேயே இல்லை.”

“ஏ. புத்திசாலி! சும்மா கிட.”

“அவர்கள் உன்னை இப்போது நகருக்குக் கொண்டுபோகப் போகிறார்கள்.”

“அங்கு, இங்கிருப்பதைவிட ஒழுங்கு முறை அதிகம்.”

ஜனங்களுடைய குரல்கள் கெஞ்சிக் கேட்பதுபோல் இருந்தன. அந்தக் குரல்கள் ஒரு. சிறு நம்பிக்கையோடு முழங்கிக் கலந்து மங்கி ஒலித்தன. போலீஸ்காரர்கள் ரீபின் கையைப் பற்றி, அந்தக் கிராமச் சாவடியின் முகப்பை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றார்கள். அங்கு சென்றவுடன் அவர்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று