பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

407


வேலையைப்பற்றி எனக்கும் ஒன்றிரண்டு விஷயங்கள் தெரியும். எனக்கு எழுதப்படிக்கத் தெரியும். சொல்லப்போனால் நான் முட்டாளல்ல..........”

தாய் அவனை நோக்கி நீட்டிய கரத்தை அவன் பற்றிப் பிடித்துக்கொண்டே வீட்டுக்காரன் பக்கம் திரும்பிப் பேசினான்:

“நீயே பார்த்துக்கொள், ஸ்திபான்” என்றான் அவன், “வர்வாரா நிகலாயவ்னா ஓரளவுக்கு நல்லவள்தான். இருந்தாலும், இந்தக் காரியத்தை முட்டாள்தனமென்றும் ஆபத்தானதென்றும் அவள் கருதுகிறாள். என்னவோ இளைஞர்கள் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு, மக்களது மூளையில் முட்டாள்தனத்தையே புகுத்தி வருவதாக அவள் கருதுகிறாள். ஆனால், நீயும் நானும் இன்று கைதான அந்த முஜீக்கை அறிவோம். அவன் முழுக்க முழுக்க நல்லவன்; முஜீக்குக்கே அவன்தான் சரியான உதாரணம். ஆனால், இதோ பார். இந்த அம்மாள் ஒன்றும் இளவயதானவள் இல்லை; மத்திம வயதுதான், எப்படிப் பார்த்தாலும் இவள் அந்தச் சீமாட்டி வர்க்கத்தவரைச் சேர்ந்தவளல்ல. நான் கேட்கிறேன் என்று வித்தியாசமாய் நினைக்காதீர்கள். நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியுமா?”

அவன் விரைவாகவும் தெளிவாகவும் மூச்சுவிடவே அவகாசம் பெறாமலும் பேசினான். அவனது தாடி நடுங்கியது. கண்கள் தாயின் முகத்தையும் உருவத்தையும் கண்டுகொண்டிருந்தன. அவனது துணிமணிகள் கிழிந்து கந்தலாய்ப் போயிருந்தன. தலைமயிர் உலைந்து போயிருந்தது. அவன் இப்போதுதான் ஏதோ கைச் சண்டையில் கலந்து, தன் எதிரியை மண்ணைக் கவ்வச் செய்த உற்சாகத்தோடு திரும்பி வந்து நிற்கிற மாதிரி இருந்தான். அவனது ஆர்வத்தைக் கண்டவுடனேயே தாய்க்கு அவனைப் பிடித்துப்போய்விட்டது. மேலும் அவன் கள்ளங் கபடமற்று எளிமையோடு பேசினான். அவனது கேள்விக்குப் பதில் சொல்லும்போது அவள் அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள். அதன் பின்னர் அவன் மீண்டும் ஒரு முறை அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டுக் கலகலவென்று சிரித்தான்.

“இது ஒரு புனித காரியம் ஸ்தியான்” என்றான் அவன்; “இது ஓர் அருமையான காரியம். இந்தக் காரியம் மக்களிடமிருந்தேதான் தோன்றுகிறது என்று நான் சொல்லவில்லையா? ஆனால் அந்தச் சீமாட்டி —அவள் உனக்கு உண்மையைச் சொல்லவில்லை. அவள் உண்மையை உன்னிடம் சொல்லிவிட்டால். தனக்கே தீங்கு செய்துகொள்வாள். அவளை நான் மதிக்கத்தான் செய்கிறேன். அது உனக்கு நான்