பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—23—

கூறும் “உயர்ந்தவர்" "தாழ்ந்தவர்" என்பவர்
கோயிலின் செய்தி விட்டுப் - புலி
காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை?
காட்டுவிர் ஒன்று பட்டு. 29

வீறும் உயர்ந்தவர் கோயில் புகுந்ததில்
வெற்றி இந் நாட்டில் உண்டோ?- இனிக்
கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்
தீதெனல் யாது கொண்டோ? 30

***