பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—29—

கோரும் "இமயாசல" முதல் - தெற்கில்
கொட்டுபுனல் நற்"குமரி" மட்டும் இருப்போர் - இவர்
யாருமொரு சாதியெனவும் - இதில்
எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம்
பாரதநற் றேவிதனக்கே - நாம்
படைமக்கள் எனவும் நம் மிடை இக்கணம் - அந்த
ஓருணர்ச்சி தோன்றியஉடன் - அந்த
ஒற்றுமை அன்றோ நமக்கு வெற்றியளிக்கும்? - நாம் (என்)

***