பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாழ்த்தப்பட்டார்

சமத்துவப் பாட்டு

(குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு).

புவியிற் சமூகம் இன்பம் பூணல் சமத்துவத்தால்
கவிழ்தல் பேதத்தாலடி - சகியே கவிழ்தல் பேத 1

புவிவேகம் கொண்டு செல்லும் போதில் உடன்செல்லாதார்
அவிவேகம் கொண்டாரடி - சகியே அவிவேகம் கொண்டா 2

தாழ்வென்றும் உயர்வென்றும் சமூகத்திற் பேதங்கொண்டால்
வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே வாழ்வின்பம் உண்டா 3

தாழ்ந்தவர் என்று நீக்கிச் சமுதாயச் சீர்தேடி
வாழ்ந்தது காணேனடி - சகியே வாழ்ந்தது 4

பிறப்பி லுயர்வுதாழ்வு பேசும்சமூகம் மண்ணில்
சிறக்குமோ சொல்வாயடி - சகியே சிறக்குமோ 5

பிறந்த முப்பதுகோடிப் பேரில்ஐங் கோடிமக்கள்
இறந்தாரோ சொல்வாயடி - சகியே இறந்தாரோ 6