பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 அ-2-12 பொறையுடைமை 16 பொழிப்புரை : வாழ்வு நெறியின் எல்லை மீறிக் கீழ்மையுற்றவரின் வாயினின்று வெளிவரும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், இல்லறத்தைத் துறந்து தவம் மேற்கொண்டொழுகும் துறவியரை விடவும், மனம், மொழி, மெய்களால் துய்மையுற்றவர் ஆவர்.

1. இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - வாழ்வு நெறியின் எல்லை மீறிக் கீழ்மையுற்றவரின் வாயினின்று வெளிவரும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்,

இறந்தார் - வாழ்வு நெறியின் எல்லை மீறிக் கீழ்மையுற்றவர். வாய் இன்னாச் சொல் - வாயினின்று வெளிவரும் கொடிய சொற்களை, வாய் இன்னாச்சொல் என்றது, அவர் வாயினின்று வேறு இனிய சொற்களே வராமை குறித்தது. தோற்கிற்பவர் - நோன்றுகொள்ளுகிறவர்; பொறுத்துக் கொள்பவர்.

2. துறந்தாரின் தூய்மை உடையர் - இல்லறத்தைத் துறந்து தவம் மேற்கொண்டொழுகும் துறவியரை விடவும், மனம், மொழி, மெய்களால் தூய்மை யுற்றவர் ஆவர்.

துறந்தார் - இல்லறத்தைத் துறந்தவர். இங்குத் துறவைவிட அவர் நோற்கும் தவமே முன்வைத்துச் சொல்லப் பெறுவதால், தவம் மேற்கொண்டொழுகும் துறவியரை விடவும் எனக் கூறவேண்டியதாயிற்று.

தூய்மை உடையர் - மனம், மொழி, மெய்களால் தூய்மையுற்றவர்.

மனத்துய்மை - பல்வேறு வகையான உலகியல் நிகழ்வுகளுக்கிடையில், தம் மனத்தை இல்லறத்தின்கண் ஊன்றி, அவ்வில்லறத்தின் அகப்புறச் சுமைகளையும் நோன்று (பொறுத்து), அவ்வில்லறத்தாரையும் அறத்துவழி ஒழுகச் செய்து, தாமும் தம் அறவழியினின்று இழுக்காமல் நிலை நிற்பது, மனத்தைத் தூய்மையுறச் செய்வதால் மனத் துய்மை குறிக்கப்பெற்றது. என்னை? . மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும் என்றாராகலின், அத்துடன்,

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து 48 என்று முன்னரே கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கது.