பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 அ-2-14 வெஃகாமை 18

ஆம் ஆக்கம் ஆகும் செல்வம் ஆகி வரும் செல்வம். 2. விளைவயின் பயன் - விளைவு தருங்கால், அதன் பயன். வயின் இடத்து - விளைவு தரும் இடத்து. விளைவு தருங்கால், ‘விளைவு’ என்றது, ஈறு தவிர்ந்து முதனிலையாய் நின்று வயின் சேர்ந்து

வினைத்தொகையானது. - பயன் அதனுடைய பயன். 3. மாண்டற்கு அரிதாம் - பெருமையோடு துய்த்தும், ஈந்தும் மகிழ்தற்கு

அரியது . இயலாது. - மாண்டல் + கு மாண்டற்கு. மாண்டல் - பெருமை பெறல்.

பெருமையுடன் துய்ப்பது. பயன் என்று கூறியதால் ஈதலும் துய்ப்பும் காட்டப் பெற்றன. செல்வத்துப்

பயன் ஈதலும் துய்த்தலும் ஆகலின், என்னை?

செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புத பலவே’ - புறம்:189:7-8 ‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்’ - குறுந்:63:1 ‘வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி வேய்முற்றி முத்து)உதிரும் வெற்ப அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம்.’ - பழமொழி:151 - உழைப்பில்லாமல், பிறனுடையதை வவ்வி ஈட்டிய செல்வம் ஆதலின் அதனைப் பிறர்க்குப் பெருமையுடன் ஈதற்கும், மகிழ்வுடன் துய்த்தற்கும் இயலாது என்க. என்னை?

தெண்ணி அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில் * - 1065 ‘மருந்தோமற்று ஊன்ஒம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து - ‘இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின் . - 976 ‘பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமையால்திரிந் தற்று

- 968

1000