பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

69



யாவர்க்கும் இல்லாத நிகழ்வுகள் அல்ல.

- கேடு - நல்ல நிலையில் உள்ளது கெடுதல்.
பெருக்கம் இருக்கின்ற நிலையில் மேலும் சிறப்பது.

- உலகில், நல்ல நிலையில் உள்ள ஒருவர் கேடு அடையும் பொழுது, மனம் குன்றி, அக்கேட்டினின்று மீளத் தம்மைக் காத்துக் கொள்ளத் தம் நேர்மை உணர்விலிருந்து மாறித் தாமும் அவ்வழியில் பொருளை ஈட்டலாமோ என்று நினைப்பதும், வாய்ப்பு நேரின் அவ்வழியில் நடந்து தம் நிலையைச் சரி செய்துகொள்ள முயல்வதும் இயல்பாக உள்ளது.

- அதேபோல், ஓரளவு நல்ல நிலையில் உள்ளவரும், தம் உழைப்பால் மேம்பாடு அடைந்து வரும்பொழுது, மனம் கிளர்ச்சியுற்று, அம் மேம்பாட்டை மேலும் ஒன்றுக்குப் பத்தாகப் பலமடங்கு பெருக்கிக் கொள்ளத் தம் நடுநிலை உணர்விலிருந்து பிறழ்ந்து - இன்னும் குறுகலான வழிகளில் ஈடுபட எண்ணுவதும், சூழ்நிலை வாய்ப்பாக அமையின், அவ்வழிகளையும் கடைப்பிடித்துத் தம் நலத்தையும் வளத்தையும் மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள முயல்வதுங்கூட இவ்வுலகில் உள்ளவர்களுக்கு இயல்பாக உள்ளது.

- இவ்வாறு, தம் மன நேர்மையில் கீழ்மையுற விரும்பாதவர்கள் கூடத் தமக்குத் தாழ்ச்சியும், உயர்ச்சியும் வருகின்ற வேளையில், முன்கூறிய அம் மனவுணர்வுகளால் தாக்கமுற்றுத் தம் நடுநிலை உணர்வில் தாழ்ந்து போகும் உலகியல்பை இங்கு எடுத்துக் கூறி, அக் கெடுதல்களும் வளப்பெருக்கமும் எல்லார்க்கும் வந்து வாய்க்கின்ற உணர்வுகளே என்று பொதுமைப் படுத்தினார், என்க.

இந்நிலைகளைப் பரிமேலழகரும், காலிங்கரும், தீவினை நல்வினையால் வரும் கேடும் பெருக்கமும் என்று விளக்கப்படுத்திக் 'கர்மா'வியல் கோட்பாட்டை நிலைநிறுத்தினர் என்க. பாவாணரும் அதையே வழிமொழிந்தது மிகவும் வருந்தத்தக்கதே ஆகும். அவரும் மதஞ்சார்ந்த உணர்வினார் ஆகலான்.

. உலக மாந்தரின். இயல்பு இயங்கியலையெல்லாம் வினை. 'கர்மா' என்னும் நிலைகளுக்கே உட்படுத்திக் காட்டிவிடின், இங்குற்ற மக்களின அடிப்படையான அறிவியல், பண்பியல் கூறுகளுக்கே பொருளில்லாமற் போவதை அறிவாராய்ந்த பெருமக்கள் நன்கு எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

அனைத்து நிலைகளுக்குமே முற்பிறவி வினைநிலையும் 'கர்மா' நிலைகளுமே அடிப்படை யெனில், இங்கு நாம் எண்ணுவதற்கும் இயங்குவதற்கும் அறமுரைத்தலும், ஆளுமை கூறுதலும் தேவையே