பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

கூந்தலுக்கு மன எண்ணெய்களைப் பூசி நல்ல உடைகளை உடுத்துக்கொண்டு கைகளிலே வளையல்கள் இட்டு, நெற்றியிலே பொட்டிட்டு கண்ணுக்கு மையிட்டு மேனியிலே பொன் அணிகள் பலவும் பூட்டிக்கொண்டு பூவும் அணிந்து ஆடவர்களை மயக்கிக் காசு பறிக்கின்ற வேசையர்களின் அலங்காரமாகிய கண்ணிக்குள்ளே சிக்கிக் கொள்ளும் காமுர்களைப் போலவும் ஆசாரங் கெட்ட துலுக்கன் ஒருவனின் குதிரையானது போன போது அடியொட்டுப் பாறையிலே பட்ட அதன் குளம்புகள் அப்படியே ஒட்டிக் கொண்டதைப் போலவும் எல்லாத் தேசங்களிலும் உள்ள கொக்குகள் எல்லாம் நம் கண்ணிக்குள்ளே வந்து வந்து சிக்கிக்கொண்டதைப் பார்! நமக்கு இன்று கறிகள் நிறைய வாய்க்கிறதையும் பார்.அதனால் இனிச் சத்தம் போடாதே அப்பனே!

ஆலாவும் கொக்கும் கண்ணிக்கு அருகாமையிலே வருகுது. ஆசாரக் கள்ளர்களைப் போல நாரையானது கபடமாகத் திரிந்து கொண்டிருக்கிறது. வேல்போன்ற கண்களையுடைய வேசையர்களின் மேற்கொண்ட ஆசையினால் கீழும் மேலுமாகத் திரிந்து கொண்டிருக்கும் வேடிக்கையான மனிதர்களைப் போல உன் கால்களால் சுற்றித் திரிந்து திரிந்து எம் கண்ணிக்கு உள்ளாக வரும் பறவைகளைக் கலைந்து போகச் செய்யாதே. பாலும் நெய்யும் ஆறு போல் ஒடிக்கொண்டிருக்கும் பாற்பாயாசத்திலே பல்லை உடைப்பதற்கு ஒரு சிறு கல் வந்து அகப்பட்டாற் போலப் பேசுகின்றாய். இனிச் சத்தம் போடாதே அப்பனே!

பூசிஉடுத்து முடித்து வளையிட்டுப்

பொட்டிட்டு மையிட்டுப் பொன்னிட்டுப் பூவிட்டுக் காசு பறித்திடும் வேசையர் ஆசாரக்

கண்ணிக்குள் ளேபடும் காமுகர் போலவும் ஆசார ஈனத் துலுக்கன் குதிரை

அடியொட்டுப் பாறை அடியொட்டி னாற்போலும் தேசத்துக் கொக்கெல்லாம் கண்ணிக்குள்ளேவந்து

சிக்குது பார்கறி தக்குது பார்இனி (கெம்)