பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 53

அக்காள் என்னுஞ்சகி வெட்காமல் ஏசுவாள் மன்மதா - அவள் அல்லாமல் தாயொரு

பொல்லாத நீலிகாண் மன்மதா 2 (கணை - மலர்க்கணைகள். அவற்றை எய்யும்போது ஏற்படுகின்ற தாபங்கள் முதலியவற்றைக் கொக்கோக நூலிலே காணலாம். 'செக்கரும் பாவி நிலா என்றதனால் மாலைக் காலத்தினையடுத்து இருள் மயங்கிக் கொண்டிருக்கும் நேரம் என்க. என்னை வருத்த நிலவொன்றே போதுமே! நின் கணை எதுவும் வேண்டாமே! என்றனள். தாபமிகுதியால், இரதியிடம் நீ மால்கொண்டவனாயிற்றே; அங்ங்ணம் மையலின் இயல்பை எல்லாம் அநுபவித்து அறிந்தும் என்னை ஏன் இப்படி வருத்துகின்றாய்? என்கிறாள். அக்காள் - மூத்தவள்; காதலின் போதையைத் தான் அநுபவித்தவளாயிருந்தும்கூட, அவள் என்னை ஏசுவாள் என்பது குறிப்பு)

மன்மதா இவ்வூரிலுள்ள பிற நேரிழைமார்களையும் ஊரவர்களையும் போய்ப் பாரடா அவர்கள் எவ்வளவு கவலையற்று நிம்மதியாக இந்நேரத்திலே உறங்குகின்றனர்? எனக்கோ, கண்ணில் நித்திரையே அணுகாமல் அதுவும் ஒரு சத்துருவாகவே விளங்குகின்றதே! கடலொலியாகிய முரசமும் இல்லாமல், வேறொரு எக்காளமும் உனக்கு எதற்காகவோ பிள்ளாய்? சிறு பெண் பிள்ளையாகிய என்மேற் போரிடும் நீயும், ஓர் ஆண்பிள்ளையாவாயோ மன்மதா, -

குற்றால நாதரின் நீண்ட சடை இதுவன்று; இது என் கருமையான கூந்தலின் பின்னல் காண்பாயாக மன்மதா என் நெற்றியிலே விளங்குவது நெற்றிக்கண்ணன்று; சிந்துாரப் பொட்டுத்தான் காண்பாயாக! பெண்ணைப் பாகமாக உடையவர்; தென்னாரிய நாட்டினர்; எங்கள் நன்னகரிலே யுள்ள குற்றாலர் என்னை விட்டுவிட்டு அவர் முன்னே உன் செயலைச் செய்யப் போவாயாக, மன்மதனே! போய் விடுவாயாக!

நேரிழை யாரையும் ஊரையும்

பாரடா மன்மதா - கண்ணில்