பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 57

மன்றற் குழவி மதியம்

புனைந்தாரைக் கண்டு - சிறு தென்றற் குளவி தினங் கொட்டக்

கொட்டநொந் தேனே! குன்றச் சிலையாளர் குற்றால

நாதர்முன் போனேன் - மதன் வென்றிச் சிலைகொடு மெல்லமெல்

லப்பொரு தானே! 3 பெம்மானை நன்னகர்ப் பேரரச வீதியிற் கண்டு - அவர் கைம்மானைக் கண்டு கலையை

நெகிழவிட் டேனே! செம்மேனி தன்னிற் சிறுகறுப்

பாரை நான் கண்டு - இப்போது அம்மாவென் மேனியடங்கலுமே

கறுத் தேனே! 4 (மன்றற் குழவி மதியம் - வளர்பிறையிலே மணங் கொள்ளுதல் மரபாதலால் வளர்பிறை என்று குறிக்க மன்றற் குழவி மதியம்’ என்றனர் என்றும் கருதலாம்; அழகிய பிறை எனவும் கூறலாம். குளவி - கொட்டி வருத்தும் பூச்சி வகைகளுள் ஒன்று. குன்றச் சிலை - மேருவாகிய சிலை, மதன் வென்றிச் சிலை - கரும்பு வில், பெம்மான் - பெருமான் அடங்கலும் - அனைத்தும்.) வெண்மை நிறமுடைய எருதின்மேல் ஊர்ந்துவரும் பாம்பணிகள் புனைந்தவரைக் கண்டு, அதற்குமுன் மனம் விரும்பியிருந்த குளிர்ச்சியான திங்களையும் ஞாயிறு போலக் கொதிப்புடையதாயிருக்கக் கண்டேனே! எள்ளளவும் உணவும் உறக்கமும் இல்லாத அவரைக் கண்டு நானும் மிகச் சிறந்த உணவும் உறக்கமும் அற்றவளாகப் போய்விட்டேனே!

வெள்ளி விடையில் வியாளம்

புனைந்தாரைக் கண்டு - சிந்தை நள்ளிய திங்களை ஞாயிறு

போலக்கண் டேனே