பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 165


தொடற்கு அரியாய் சுடர் மா மணியே
     சுடு தீச் சுழலக்
கடல் கரிதுஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும்
     கறைக்கண்டனே 32

அடல்-வலிமை கொல்லுந்தன்மையுமாம். கறை-விடம்.

'போரிடுகின்ற யானைகளைப் போன்று பேராற்றல் படைத்த ஐம்புலன்களும், என்பால் போரிடுதலின், அவற்றுக்கு அஞ்சுகிறேன். ஐயா, விழுப்பம் பொருந்திய தொண்டர்களை அல்லால் பிறரால் தொடரப்பட முடியாதவனே! என்பால் இரங்கி, விட்டுவிடாமல் ஏற்றுக்கொள்’ என்கிறார்.

137.

கண்டது செய்து கருணை மட்டுப்
    பருகிக் களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்
     நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால்போல் பணித்துப்
      பணி செயக் கூவித்து என்னைக்
கொண்டு என் எந்தாய் களையாய்
    களை ஆய குதுகுதுப்பே 33

மட்டு-தேன். மிண்டுகின்றேனை-செருக்கால் துடிக்கின்ற என்னை. குதுகுதுப்பு-பரபரப்பு.

திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த அனுபவம் தம்மை விட்டுநீங்கியமைக்குக் காரணம் தம் நல் ஊழ் இன்மையே என்றும், தம் நெஞ்சமே இது நடைபெறக் காரணமாயிருந்தது என்றும் இதுவரை பேசிக்கொண்டிருந்த அடிகளார் இப்பொழுது ஒரு புதிய திசையில் செல்கிறார்.

பாடலின் முதலடி நன்கு சிந்தித்துப் பொருள்கொள்ள வேண்டியதாகும். 'கண்டது செய்து' என்று வரும் இரண்டு