பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


149.

பாடிற்றிலேன் பணியேன் மணி நீ
     ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்
     வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன் சிவன் எவ் இடத்தான்
     எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன் கிடந்து உள் உருகேன்
     நின்று உழைத்தனனே 45

பச்சூன்-பசிய ஊனாகிய உடல். உழைத்தனன்-வருந்தினேன்.

‘ஐயனே! ஒளி பொருந்திய மணிபோன்று குருவாகி நின்ற நீ மறைந்தபொழுது இந்த உடம்பை விட்டேனில்லை' என்கிறார்.

150.

உழைதரு நோக்கியர் கொங்கைப்
      பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழைதருவேனை விடுதி கண்டாய்
      விடின் வேலை நஞ்சு உண்
மழை தரு கண்டன் குணம் இலி
      மானிடன் தேய் மதியன்
பழைதரு மா பரன் என்று என்று
      அறைவன் பழிப்பினையே 46

உழை-மான். மழைதரு கண்டன்-மழைபோலக் கரியகண்டன். மானிடன்-மானை இடப்பக்கமுடையவன். தேய்மதி-பிறைமதி. பழைதரு மாபரன்-பழைமையைத் தருகின்ற பெரிய ஆண்டி.

பலாவின் பெரிய சுளையில் சிக்கிக்கொண்ட ஈ, உண்ணுமளவு உண்டபிறகு வெளியே புறப்பட நினைத்தாலும் புறப்பட முடியாதபடி அதன் கால்கள் பழத்தின் பசைத்தன்மையில் ஒட்டிக்கொள்கின்றன. மகளிரிடம் ஈடுபாடு கொண்டவர்கள், அனுபவித்த பிறகும் அந்த எண்ணத்திலிருந்து விடுபடாமல் அதிலேயே சிக்கித்