உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை* 291


போல் ஆயிற்றே, அப்படியிருக்க இதனை நேரே கண்ட அடிகளாரின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்குமோ என்ற கருத்துப்படப் பின்வரும் செய்யுளைப் பாடுகின்றார்.

வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பு இட்டநின்
பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம்
துன்பட்ட வீரர் அந்தோ வாதவூரர் தம் தூய நெஞ்சம்
என்பட்டதோ? இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே

(திருஅருட்பா 2251)

‘வாதவூரர் தம் தூய நெஞ்சம்' என்று நெஞ்சுக்கு அடைமொழியாகத் தூய என்ற சொல்லைத் தருகிறார் வள்ளலார் வாதவூரர் நெஞ்சத்தைத் துரிய நெஞ்சம் என்று கூறியதால் நான்காவது அடியில் வரும் ‘என் நெஞ்சம்’ என்பது தூ ய்மை இல்லாத நெஞ்சம் என்பது பெறப்பட்டது.

தூய்மை இல்லாத நெஞ்சங்கட ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் ஒரு நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டபோதே இப்படி இடிபட்டது என்றால், தூய நெஞ்சம் அந்த நிகழ்ச்சியை நேரே கண்டிருக்கும்போது என்ன பாடுபட்டிருக்குமோ என்று வள்ளலார் நோகின்றார்.

இப்பாடலில் ‘மண் சுமந்த கூலிகொண்டு’ பாண்டியனால் மொத்துண்டவனைப்பற்றிக் கூறவந்த அடிகளார், பாடலின் முற்பகுதியில் விண் சுமந்த கீர்த்தி உடையவன் என்றும், முக்கண்ணன் என்றும், கடவுள் என்றும் அவன் புகழைப் பாடும்போது, இடையே 'பெண் சுமந்த பாகத்தன்’ என்று கூறியுள்ளது சிந்திக்கற்பாலது.

அடிகளார் வாழ்க்கையில், இரண்டுமுறை அவர் தண்டிக்கப்படுகிறார். ஆவணி மூலத்தில் குதிரைகள் வராதபோது, பதினான்கு நாட்களுக்கு மேலாகக் கடுமையான தண்டனையை அவர் ஏற்றபோது, இந்த