உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாதுரை

13

"நான் பிரமன், சிவனல்ல!" என்று சொல்லியிருக்கக் கூடாதா? வலிய அணைந்த சுகானுபவத்திலே, வேதத்தின் முதல்வன்—சிருஷ்டி கர்த்தா களித்திருந்தார். அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் அழகு மனைவியைத் தேடிக்கொண்டு, அரன்! கண்டார் காட்சியை! கொண்டார்கோபம் இவனுக்கும் தலைஐந்து இருத்தலாலன்றோ நமது இன்பவல்லி நாமென்று எண்ணி இவனைத் தழுவினாள் என்றுவெகுண்டார். பிரமனைப் பிடித்திழுத்தார். ஒரு சிரத்தைக்கிள்ளி எறிந்தார். செய்யத்தகாத செயல் புரிந்ததற்காக எந்தப் பிரமனைச் சிவனார் தலையைக் கொய்து தண்டித்தாரோ, அதே பிரமனைப் பூலோகத்தார் எப்போதும் போலவே பூஜிக்கலாயினர் நான்முகன் என்ற புதிய நாமதேயமிட்டு.

பார்வதி தேவியை தொட்டிழுத்த துரோகியைத் தேவனென்றும், மூவரில் ஒருவனென்றும் கூறும் மதவாதியைக் கண்டிக்க அகராதியிலே சரியான பதமும் கிடைக்குமா? காட்டுமிராண்டியும், அத்தகைய காரியம் செய்தவனைக் கண்ணால் காண மறுப்பான். இங்குக் கடவுளென்று, காமுகனை, கயவனை, சிவத்துரோகியை கைகூப்பித் தொழுகிறார்கள். இதற்குப் பெயர் பக்தியாம்!

என்னய்யா பாபம்! அம்மையாரும் அவசரத்திலே ஆலிங்கனம் செய்து கொண்டார். அவரும் என்னவோ கொஞ்சம் ஆனந்தப் பரவசமாகி விட்டார், இதற்காக ஒரேயடியாகக் கண்டித்து விடுவதா?—என்று மதவாதிகளிலே ஒரு சாரார் கேட்பர். உண்மையிலேயே, உமையுடன் உல்லாசமாக இருந்து ஒரு சிரம் அறுபட்டதோடு