உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவலீலைகள்

மேனகை, அரம்பை ஆகியோரின் லாவண்யம் ஆகியவற்றைவிட, வபுஷ்டமையின் வசீகரம் அதிகம்போலும் எப்படியோ இந்திரனுக்கு இவ்வெண்ணம் மூண்டு விட்டது. ஏதேதோ செய்து பார்த்தான்; அந்த வனிதை இடந்தரவில்லை. இந்நிலையிலே, பாரிஷதன் ஓர் யாகம் செய்தான். அதன் முறைப்படி மன்னன் மனைவியாகக் குதிரையுடன் ஓரிரவு தங்கி இருக்க வேண்டும். அந்தச் சமயத்திலே குதிரை இறந்துவிட்டது. இது தெரிந்த தூதன் ஓடோடிச் சென்று, வபுஷ்டமையிடம் மோகங்கொண்ட இந்திரனிடம் இஷ்ட பூர்த்திக்கு ஏற்ற சமயம் இதுவே என்றுரைத்தான். இந்திரன் கிளம்பினான். எண்ணம் கைகூடிற்று என்ற களிப்புடன், யாகசாலை சென்றான்! இறந்த குதிரையின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினான்! வபுஷ்டமையிடம் கூடிக்களித்தான். இன்ப இரவு அவனுக்கு. இது சாமான்ய ஏடுகளிலே உள்ளதல்ல. சிவமகா புராணம்; புண்ணிய கதையிலே உள்ளவிஷயம்.

பிறனுடைய மனைவியைப் பெண்டாளும் பெருங்குணம் ! இறந்த குதிரையின் உடலிலே புகுந்து இராசானுபவம் நுகரும் இலட்சணம்! இந்திரனுக்கு இருந்தது. இத்தகைய காமாந்த காரத்துக்கும் காட்டுமிராண்டித் தனத்துக்கும் உரைவிடமாக விளங்கிய இந்திரன், காமக் குரோதாதிகளை ஒழித்து, இச்சைகளை அடக்கி கடுந்தவம் புரிந்து, கடவுள் அருள் பெற்று, தேவ பதவி பெற்றவர்களுள் சிலாக்கியமானவன் அவர்களுக்குத் தலைவன். காமக் குரோதாதிகளை அடக்கியவன் செய்தகாரியம், பிறன் மனைவி விழைதல் மட்டுமல்ல; அதற்காக அநாகரிக அக்கிரமச் செயல்! கடவுள்