பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பொற்பார் பொருளைத் தருந்திறனும் புதிய உவமமும் புனைந்துரையும் நற்பால் அமைந்த மெய்ப்பாடும் நண்ணத் தொடுப்பின் நற்கவியாம் இப்பாடல், தொடுப்பின் என்றதனாலே தொடைவகை அமையுமாறும் பாடுதல் சிறப்பென்க. உணரும் திறஞ்சால் மனத்தகத்தே உணர்ச்சி வெள்ளம் மிகுத்தோட இணரும்மலரும் நறுமணமும் இசைந்தாற் போலச் சொற்றிரளும் புணரும் பொருளும் மெய்ப்பாடும் பொருந்தி நிற்கப் புனைவுற்று வனரும் வண்ணப் பெருக்கதனை வார்க்கும் பாட்டே பாட்டம்மா