உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

15

பொன்னி--தான் கொணர்ந்த, ஒன்பது வகை மணிகள் அழுத்திய தலையணியாகிய சுட்டியை முல்லைக்குத் தந்து - வாழிய இளவரசியே! என்று வாழ்த்தி ஒருபுறம் அமைகிறாள்.

தாழை--தான் கொணர்ந்த முத்துப் பரல் இட்ட காற்சிலம்பை முல்லைக்குத் தந்து, வாழிய இளவரசியே என்று வாழ்த்தி மற்றொருபுறம் அமைகிறாள்.

சாலி--தான் கொணர்ந்த எண் சோவையுள்ள இடையணியாகிய காஞ்சியை முல்லைக்குத் தந்து வாழிய இளவரசியே என்று வாழ்த்தி ஒருபுறம் அமைகிறாள்.

கிள்ளை--தான் கொணர்ந்த, முல்லையில் தொடுத்த தானமுல்லைத் தொடயலை முல்லைக்குச் சூடி, வாழிய இளவரசியே என்று வாழ்த்த, இளவரசியாகிய முல்லை, அவளைக் கட்டித்தழுவித் தன் அண்டையில் நிறுத்தித் தானும் எழுந்து நின்று கூறுகிறாள்.

அன்புள்ள தோழியர்களே,

என் பிறந்தநாட் சிறப்பை சிறக்க வைத்தீர்கள். உங்கள் வாழ்த்து என்னைப் பெருவாழ்வில் சேர்க்கத் தக்கது. நன்றி கூறுகிறேன்.

[மீண்டும் மங்கல முரசு முழங்குகிறது நிலவு வருமுன் மற்றவர்கள் போய் விடுகிறார்கள்]
காட்சி 2

சாலி, தாழை, பொன்னி, தோரை நால்வரும் முல்லைக்கு வாழ்த்துக்கூறி வருகையில் தமக்குள் பேசிக் கொள்ளுகின்றார்கள்: