பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34

கலையும் சேர்த்தா? என்று கேட்டோம். 'இல்லை; பாட நூல்களுக்கு மேல், முப்பது நூல்களை விரும்பிப் படிப்பான்' என்று பதில் வந்தது. இதில் மாணவிகளும் மாணவர்களுக்கு இளைத்தவர்களல்லர். ஆண்டிற்கு நூறு நூல்கள் படிப்பவர்களும் உள்ளனர் என்று தெரிந்தகொண்டோம். 'எல்லாம் தாய்மொழி நூல்களா' என வினவினோம். இல்லை என்றனர். ரஷியமொழி நூல்களையும் ஆங்கில நூல்களையும் தாராளமாகப் படிப்பதை அறிந்து கொண்டோம்.

முதல் நூல் நிலையத்தைப் பார்வையிடும்போது நம் நாடு நினைவிற்கு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் தமிழ்நாட்டில் ஒரு புது உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன். விசாலமான இடம். நல்ல கட்டடம். அடக்கமான எண்ணிைக்கை. இளம் ஆசிரியர்கள். போதுமான இருக்கைகள். புது நூல் நிலையம். அதில் உட் கார்ந்து படிக்கப் பெஞ்சு, மேசைகள். அத்தகைய சூழ்நிலையில் எதை எதிர்பார்ப்பீர்கள்? பல நூல்களை எடுத்துப் படித்திருப்பார்கள் என்று. அதையே நானும் அன்று எதிர்பார்த்தேன். கணக்குக் கேட்டேன். 420 மாணவர்கள் உள்ள அப்பள்ளியில், பத்து மாதக் காலத்தில் 500 நூல்களே வழங்கப் பட்டன. எடுத்தவற்றில் எத்தனையைப் பார்த்தார்களோ! எத்தனையைப் புரட்டிப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டார்களோ! எடுத்ததை எல்லாம் படித்திருந்தாலும் ஆண்டிற்கு ஆளுக்கு ஒன்றேகால் நூல்கூட ஆகவில்லை. படிப்பைத்