உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

பொறுமைசாலியும் கூட. அடுத்த வேளைக்கு வேண்டியதை முன்னதாகவே எங்களிடம் கேட்டு, எழுதிக் கொடுத்துவிடுவார். ஆகவே தடுமாற்றம் ஏதும் இல்லை.
'சமைக்கப் பல மணி. உண்ணச் சில வினாடி' என்ற முறையில் பழகிவிட்ட எங்களுக்கு ஒரு முறை உண்டு முடிக்கச் சில மணி நேரமாவது ஒதுக்கவேண்டியிருந்தது. உணவுப்பண்டங்களும் ஒவ்வொன்றாகவே வந்தன. அதுவும் மடமட வென்று இல்லை. நிதானமாக அமைதியாக வந்தது. உண்பது பலவகையாக இல்லாவிட்டாலும் மணிக் கணக்கில் உண்பது மேனாட்டு முறை. அப்போது அவர்கள் பல விவகாரங்களைப் பேசித் தீர்ப்பார்கள். அதற்குப் பழகாத எங்களுக்குச் சில வேளைகளில் தாமதம், எரிச்சலாக இருந்தது. ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏன்! ஊருடன் ஒத்து வாழவேண்டுமே என்ற நினைப்பில்.
உண்ட பிறகு, ஊரைச் சுற்றிப் பார்க்கப் புறப் பட்டோம். செஞ்சதுக்கத்தின் வழியாகக் கார் சென்றது. இதோ இச்சதுக்கத்தின் பெயர்தான் செஞ்சதுக்கம். இது வரலாற்றுச் சிறப்புடைய இடம். ஆண்டிற்கு இரண்டுமுறை நடக்கும் அரசாங்க அணிவகுப்பு இங்குதான். சதுக்கத்தில் அதோ தெரிகிறதே அதுவே மஸோலியம்’. அதற்குள் லெனின், ஸ்டாலின் ஆகியோருடைய உடல்கள் பாதுகாக்கப்பட்டுத் தனித்தனி கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டுள்ளன. சாரைசாரையாக நிற்கும் ஆண்களும் பெண்களும் அச்சமாதிக்குள்